tamilnadu

img

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஊழலற்ற நிர்வாகத்தை சிபிஎம் கவுன்சிலர்கள் உறுதி செய்வார்கள்

திருப்பூர், பிப்.16-  அதிமுக ஆட்சிக் காலத்தில் நகர் ப்புற உள்ளாட்சிகளில் பெருமளவு ஊழல், முறைகேடு தலைவிரித்து ஆடியதாக கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக, திருப்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்தி ப்பில் அவர் மேலும் கூறியதாவது,  அதிமுக ஆட்சிக் காலத்தில், நகர்ப்புற உள்ளாட்சிகளில் பெரு மளவு ஊழல், முறைகேடு தலை விரித்து ஆடியது. அறப்போர் இயக்கம்  நகராட்சி, மாநகராட்சி களில் நடைபெற்றிருக்கும் ஊழல் களைப் பட்டியலிட்டு ஏற்கெனவே ஊழல் தடுப்புத் துறையில் மனுக்  கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடுத்தனர். கட்டிடப் பணிகளுக்கு திட்ட மதிப்பீடு (எஸ்டிமேட்) போடும்போது, ஆற்று  மணல் என மதிப்பீடு போட்டுவிட்டு பிற்பாடு எம் சாண்ட் மணலை வைத்து கட்டுகின்றனர். இதன் மூலம் மூன்று மடங்கு விலை உயர்த்தி காண்ட்ராக்ட் விட்டுவிட்டு, குறைந்த விலை எம் சாண்ட் மணலை பயன்படுத்திய ஒரு விசயத்தில் மட்டும் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்று  அவர்கள் வழக்கில் கூறியிருக்கின்ற னர். இப்படி பல ஊழல்கள் நடை பெற்றுள்ளன.

உள்ளாட்சி நிர்வாகம் மிக மோசமாக போயிருக்கிறது. ஒரு மின்சார உபகரணம் ரூ.250, ரூ.300 விலை இருக்கக்கூடியதை ரூ.1750 என விலை போட்டு வாங்கி இருக் கின்றனர். அதேபோல் பினாயில், மோட்டார், கொசு மருந்து என ஊழல் செய்துள்ளனர். ரூ.7 ஆயிரம், 8 ஆயிரம் சம்பளம் பெறக்கூடிய  தூய்மைப் பணியாளர்கள் வேலை பெற ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் என லஞ்சம் பெற்றுள்ளனர். நகர்ப்புற மருத்துவமனை ஆயாக்கள், நர்ஸ்கள் சுகாதாரப் பணியாளர்கள் எல்லாவற்றுக்கும் லஞ்சம்.  அதே போல் மருத்துவமனைகளை முழு வதும் ஒப்பந்த முறையில் அவுட் சோர்சிங் விட்டுவிட்டனர். நகராட்சி, மாநகராட்சிகள் நிர்வகிக்கக்கூடிய பள்ளிகள், மருத்துவமனைகள், சுகா தார நிலையங்கள் எல்லாம் சீரழிந்து சின்னாபின்னமாகி உள்ளன. குடி நீரைக் கூட தனியாரிடம் ஒப் படைப்பது என, எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைப்பது என்ற ஒரு கொள்கையை அதிமுக அரசு கடைப்பிடித்தது.

நிச்சயமாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறு கிறபோது மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்துவது, ஆசிரியர்களை நியமிப்பது, மாண வர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வழி செய்வது, சுகாதாரத் துறை முறைப்படுத்தப்பட்டு மக்களுக்கு நல்லமுறையில் சேவை செய்யும் பணியை நாங்கள் செய்வோம்.  மார்க் சிஸ்ட் கட்சி மாமன்ற, நகர்மன்ற, பேரூ ராட்சி மன்றங்களில் வெற்றி பெறு கிறபோது நகர்ப்புற உள்ளாட்சி களில் தனியார்மயத்தை எதிர்ப்பது, அவுட் சோர்சிங் முறையை எதிர்ப்பது, பணி நிரந்தரம் கேட்பது ஆகியவற்றை செய்வோம். நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்பு மிகப்பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது. அதிகமான சிறு குறு தொழில்கள், நெசவுத் தொழில்கள் என நகர்ப்புற தொழில்கள் எல்லாமே மோடி அரசின் மோச மான கொள்கைகளால் அழிந்து போயுள்ளன. ஜிஎஸ்டி காரணமாக ஆயத்த ஆடை தொழில் நசிவு, ஏற்று மதி பாதிப்பு, ஜவுளித் தொழில் மிகப் பெரும் கேள்விக்குறியாகி இருக் கிறது. எனவே நகர்ப்புற வேலை வாய்ப்பு கடும் நெருக்கடி ஏற்பட்டு ள்ளதால், நகர்ப்புற வேலைவாய்ப்பு க்கு உரிய புதிய திட்டங்கள் உரு வாக்க வேண்டும் என கோரினோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடக்க நிலையில் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை அறி வித்திருக்கிறார்கள். அதை எல்லா  மாநகர், நகராட்சி, பேரூராட்சிகளில் விரிவுபடுத்த நாங்கள் வற்புறுத்துவோம். 

அதேபோல் நகர்ப்புறங்களில் அதிகமான மக்கள் வரும்போது சமூக நெருக்கடி ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல், வீடுகள் குடியிருப்பு நெரிசல், போதுமான ஆரோக்கிய குடியிருப்பு இல்லை, புறம்போக்கு நிலங்களில் குடி யிருப்போருக்கு பட்டா வழங்கப்பட வில்லை என பல பிரச்சனைகள் புற்றீசல் போல உருவாகிறது. எனவே நகர்ப்புற மக்களுக்கு பட்டா  வழங்குவது, வகை மாற்றம் செய்து  பட்டா வழங்குவது, குடியிருப்பு  கட்டிக் கொள்ள கடன்களை வழங்கு வது, கலைஞர் வீடு கட்டும் திட்டம் முதல்வர் அறிவித்திருப்பதை எல்லா இடங்களிலும் விஸ்தரிக்க வேண்டும். வேலைவாய்ப்புகளுக்கு புதிய திட்டங்கள், நகர்ப்புற மக்க ளுக்கு வாழ்வாதாரத் திட்டங்கள்,  குடியிருப்பு என நல்ல திட்டங்களை நாங்கள் உருவாக்குவோம். எனவே, மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும்போது அர்ப்பணி ப்பு உணர்வோடு அவர்கள் போராடு வார்கள். ஊழலற்ற நிர்வாகத்தை நாங்கள் தருவோம் என முதல்வர் சொல்லி இருக்கிறார். அதற்கு முன்னணி பாத்திரமாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற, நகர்மன்ற, பேரூ ராட்சி உறுப்பினர்கள் பணியாற்று வார்கள். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.