tamilnadu

img

பக்கிங்காம் கரையோரக் குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிராகப் போராடுவோம்

சென்னை,ஜூலை 12 - பக்கிங்காம் கால்வாய்க் கரையோர மக்களை போலிக் காரணம் சொல்லி வெளியேற்றுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி செல்வா தெரிவித்துள்ளார். பக்கிங்காம் கால்வாயை மறுசீரமைப்பு திட்டத்திற்காக சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் வெளி யேற்றப்பட உள்ளதாக தெரிகிறது. முதற்கட்டமாக 1200 குடும்பங்களை வெளியேற்ற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கோரி வருகிறது. இந்த நிலையில் திரு வல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடம், சிவராஜபுரம் கரையோர மக்கள் மனு அளித்து பேசியுள்ளனர். இதனையடுத்து, செவ்வா யன்று (ஜூலை 11) சிவராஜ புரத்தில் ஊர்க் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜி.செல்வா பேசுகையில், சீரமைப்பு திட்டம் குறித்து வெளிப்படையாக சொல்ல மறுக்கும் அரசு நட வடிக்கையை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதர வாக இருக்கும். குடியிருப்புகள் அகற்றா மல், தடுப்புச்சுவர் கட்டித்தரப்படும்என்று அமைச்சர் மா சுப்பிரமணி யன் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீதிமன்ற உத்தரவு என்று கூறுவதை ஏற்க முடியாது. நீதிமன்ற உத்தரவு மக்கள் வாழ்வாதாரத்திற்கு எதிராக இருக்குமானால் அதை எதிர்த்து அரசு வாதாட வேண்டும் என்றும் கூறி னார். அதிகாரிகள் மக்களிடம் மீண்டும் மீண்டும் வந்து பயோமெட்ரிக் சோதனை செய்து அடையாளங்களை கேட்டு வற்புறுத்துவது சட்ட விரோதமானது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதி மக்களின் நலன் காக்க துணை நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் பகுதி குழு உறுப்பினர் ஆர்.கபாலி தலைமை தாங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், பகுதிச் செயலாளர் கவிதா கஜேந்திரன், கிளை செயலாளர் காந்திமதி உள்ளிட்டோர் பேசினர்.