மத்திய தரைக்கடலையும், செங் கடலையும் இணைக்கும் வகை யில் 1860-களில் சூயஸ் கால்வாய் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. இங்கிலாந்திலிருந்து இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு வரும் கப்பல்கள் ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றிவர வேண்டி யதில்லை. பயண நேரம், எரிபொருளை பெருமளவு மிச்சப்படுத்தும் திட்டமே சூயஸ் கால்வாய். 2021 மார்ச் 23-ல் ‘எவர்கிவன்’ என்ற பெரும் கண்டெய்னர் களை ஏற்றி வைத்த கப்பல் தரை தட்டி யதால் மார்ச் முதல் ஜூலை வரை அக்கப்ப லின் பின்னால் 369 கப்பல்கள் நகர முடி யாமல் தத்தளித்தன. உலக பொருளா தாரத்தின் 10% சூயஸ் கால்வாய் வழியே சரக்கு கப்பல் பயணத்தை சார்ந் துள்ளது. சூயஸ் கால்வாயில் தரை தட்டிய கப்பலால் உலக பொருளாதாரம் ஸ்தம் பித்தது. இதேபோல் கொரோனாவினால் உலக பொருளாதாரம் முடங்கியது. கொரோனா எப்போது முடிவிற்கு வரும் என உலகமே எதிர்நோக்குகிறது.
அமெ ரிக்க மக்கள், கொரோனா தாக்குதல் முடிந்து கொரோனாவிற்கு பிந்தைய காலத்தில் நுழைந்து விட்டோம் என கருதிக் கொண்டிருக்கும் போதே, தற் போது அமெரிக்காவில் கொரோனா ருத்ர தாண்டவமாடுகிறது. அரசின் சோதனை மையங்களில் வெளியான பாதிப்பு விப ரங்களைத் தான் அரசு கூறுகிறது. அமெ ரிக்காவில் மையப்படுத்தப்பட்ட தேசிய சுகாதார சிகிச்சை அமைப்பு இல்லை. எனவே, வீட்டிலேயே கொரோனா சோதனை செய்பவர்கள் விபரம், பாதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை. எனவே அரசு கூறுவதைவிட உண்மையான பாதிப்பு அதிகம். அமெ ரிக்காவில் கொரோனா தடுப்பு சீர் குலைந்துள்ளது. தடுப்பூசி போடாத வர்களை உடனடியாக போட்டுக் கொள்ளுமாறு நோய் கட்டுப்பாட்டு மையம் வேண்டுகோள் விடுக்கிறது. மேலும் பெரும் நிறுவனங்களின் வேண்டு கோளை ஏற்று, கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் தங்களை 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, 5 நாட்கள் மட்டும் தனிமைப் படுத்திக் கொண்டால் போதும் என அறிவித்துள்ளது. ஓமைக்ரான் பாதிப்பு லேசான அறிகுறி களே தென்படுகிறது. ஆனால் டெல்டா வகை பாதிப்பு கடுமையானது. இதற்கு 5 நாட்கள் தனிமைப்படுத்தல் போதும் என்பதற்கு விஞ்ஞான ஆதாரம் எதுவும் இல்லை. கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொள்ள முதலாளித்துவம் தவறி விட்டது. உலகிலேயெ அதிக கொரோனா பாதிப்பும், அதிக கொரோனா மரணங்க ளும் அமெரிக்காவில் தான் நிகழ்கிறது.