tamilnadu

img

“யூகத்தில் விளையாடும் மனசாட்சியே!”

இன்றைய நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில், தன்னைச் சுற்றி நடக்கும் விரும்பத்தகாத செயல்களை கண்டு, கோபத்தோடு மட்டும் கடக்காமல் எதிர் வினையாற்றுபவர்கள் ஒரு சிலரே. அவ்வாறு எதிர் வினையாற்றுகையில், ஏற்படும் விளைவுகளை மதிப்பீடு செய்யாமல் அனுமானங்களின் அடிப்படையில் முடிவெடுக்கும் போது, பெரும்பாலும் சிக்கலான சூழலுக்குள் உழலக்கூடிய நிலையே உண்டாகும். இவ்வாறு யூகத்தில் முடிவெடுத்து மன உறுத்தலுக்குள்ளான,ஒரு சிறந்த ஆசிரியையின் நேர்மையான போராட்டமே,”The Teachers Lounge” என்ற ஜெர்மன் படம்.  மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது  ஜீரோ டாலரன்ஸ் பாலிசி (Zero Tolerance Policy)  என்ற ஒழுங்கு விதியை கறாராக கடைப்பிடிக்கி றது ஜெர்மனியிலுள்ள ஒரு ஜூனியர் உயர்நிலைப் பள்ளி நிர்வாகம். இப்பள்ளியின் கணித ஆசிரியை கார்லா.போலந்திலிருந்து ஜெர்மனியில் குடியேறியவள். பள்ளியின் ஒழுக்க கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிப்பவள்.  பள்ளியில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதை செய்வது மாண வர்களா? ஆசிரியர்களா? பணியாளர்களா? யாரென்று அறிய முடியவில்லை.  திருடர்களைக் கண்டறிய, கார்லா ஒரு வழியை  கையாள்கிறாள். அவளது பணப்பையை மடிக் க ணினி கேமரா முன், இவள் அணியும் குளிர்கால மேல்சட்டை பைக்குள் வைத்துவிட்டு, அங்கிருந்து நகர்கிறாள். சிறிது நேரத்திற்கு பின் வந்து பணத்தை சரிபார்க்கையில், பணம் குறைகிறது. கணினிப் பதிவில் நட்சத்திரம் போட்ட டிசைனில் மேலாடை அணிந்தவரின் ஆடை மட்டும் தெரி கிறது. பணப்பை உள்ள மேல்சட்டை அசைகிறது. முகம் தெரியவில்லை. கணினியில் தெரிந்த ஆடை  டிசைனில்,உடுத்தியிருப்பவர் யாரென்று அலு வலகத்தில் தேடுகிறாள்.சிப்பந்தி ஹூக்ன் அதே போல் உடை அணிந்துள்ளாள். இவள், கார்லா வகுப்பு மாணவன் ஆஸ்கரின் தாயாவாள்.  ஹூக்ன் நிர்வாகத்தால் நேரில் விசா ரிக்கப்படுகிறாள்.அவளோ மறுக்கிறாள்.யூகத்தின் பேரில்,திருடியவள் ஹூக்ன் தான் என உறுதியாக நம்பப்படுகிறது.  முறைப்படி விசாரிக்காமல் ஹூக்ன்,தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறாள்.

முறைப்படி விசாரிக்காமல் ஹூக்ன்,தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறாள். ஹூக்ன் மகன் ஆஸ்கர் தனது தாய் குற்றமற்ற வள் என்பதை முழுமையாக நம்புகிறான். இதனால்  பள்ளியில் கார்லாவோடு மோதுகிறான். திருட்டுப்  பட்டத்திற்கு ஆதாரமான கார்லாவின் மடி கணினியை பலவந்தமாக எடுத்து ஆற்றில் வீசு கிறான்.இதனால் ஆஸ்கரும் பள்ளியிலிருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறான்.  கார்லா,ஆஸ்கார் இருவருக்குமான மோதலில் வெற்றி யாருக்கு?பணத்தை திருடியது யார்? கூர்மையான மூளை, தொழில் நுட்ப வசதி இவற்றோடு அவதரித்துள்ள இன்றைய இளம் தலை  முறையைச் சார்ந்த ஆஸ்கர், 0.999ம், 1ம் சம மில்லை என மாணவர்களில் ஒரு சாரார் கூற, சம மென கணித முறையில் நிருபிப்பதும்; ஆறு பேர் ஒரு சிறிய பெஞ்சில் கீழே விழாமல் நிற்க தக்க யோசனை வழங்குவதும்; ஆசிரியை கார்லாவை மன்னிப்பு கேட்க வைத்தும்,தன்னை சூட்சும புத்தி சாலியாகவே காண்பிக்கிறான்.  கார்லா ஏற்கனவே ஆஸ்கரிடம், ரூபிக் கன சதுர  புதிரைக் கொடுத்து தீர்வு காண வலியுறுத்துகிறாள். முதலில் மறுத்து பின் ஏற்கிறான். இறுதியில் மன்னிப்புக் கோரிய கார்லாவிடம் கனசதுர புதி ருக்கு தீர்வு செய்து சமர்ப்பிக்கிறான். அதுவரை இறுக்கமாக இருந்த கார்லா அக்கணத்தில், முதல் முறையாக நெகிழ்கிறாள். கார்லாவின் மன்னிப்பை  ஆஸ்கார் ஏற்று கொண்டதன் குறியீடே கனச்சதுர புதிருக்கான தீர்வு.  ஆஸ்கருக்கு எதார்த்தத்தை புரிய வைத்து, அவனது கல்வியை பாதுகாத்த கார்லாவே நெஞ்ச மெல்லாம் நிறைந்தவளாகிறாள்.

திருடர் யாரென்பது தெரியாமல், கதை மாந்தர்கள் மட்டுமின்றி நாமும்,பள்ளி கட்டிடத்தின் அனைத்து பகுதிகளும், சாட்சிகளாக உறைந்து நிற்க, யூகத்தோடு வெளியேறுகிறோம். கார்லா வகுப்பு மாணவன் அலி. இவன் கூடு தலாக பணம் வைத்திருந்ததை “திருடிய பணமாக  இருக்குமோ?” எனச் சந்தேகிக்கிறது நிர்வாகம்.  இதர மாணவர்கள் முன் அலி விசாரிக்கப்படு கிறான்.இதைக் கண்டு கார்லா செய்வதறியாது தவிக்கிறாள். நின்ற நிலையில் திரும்பி தலைமை யாசிரியரிடம், “இதெல்லாம் சரியில்லை”எனச் ஜாடையாக தனது விரிந்த கண்கள் வழியாக சொல்லும்போதும்; ஹூக்ன்,பெற்றோர்கள் கூட்டத்தில், கார்லாவை “வெட்கம் கெட்டவளே” எனத் திட்டும் போது panic attack ஏற்பட்டு, ஓய்வறையில் நெகிழி உறையை ஊதி, ஊதி மூச்சை  சகஜ நிலைக்கு கொண்டு வரும் காட்சி உள்ளிட்ட  படம் முழுவதும் சிறந்த கணித ஆசிரியை கார்லா வாக, நடிப்பில் மிரட்டியுள்ளார் லியோனீ ஃபெனஸ் . சோகத்தை ஒரக்கண்ணால் காண்பித்து, சந்தோ சத்தை மெல்லிய புன்னகையால் கடத்தி,மாணவன் ஆஸ்கராக நடித்துள்ள லியோனர்ட் ஸ்டட்நீஸ், சவால்கள் மிகுந்த பாத்திரங்களை ஏற்று சாதிப்பார் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளார். பன்னிரண்டு வயது மாணவர்களை ஆசிரி யர்கள் நிதானத்தோடு கையாளுவது, மாண வர்கள் ஆசிரியர் பெயரைச் சொல்லி அழைப்பது;  ஆசிரியர் மாணவர்களைத் தொடாமல் பேசுவது;  கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்ற மாணவப்  பிரதிநிதிகளின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது; பத்திரிகை நடத்தும் சீனியர் ஜூனியர்  மாணவர்கள் கலந்த குழு, ஆசிரியர்களிடம் நேர்காணல் நடத்தி கட்டுரை வெளியிடுவது உள்ளிட்ட ஜெர்மன் பள்ளியின் பல செயல் பாடுகள்  நம்மை ஆச்சரியத்தில் திகைக்க வைக்கிறது.நம்  நாட்டிலோ இப்போது தான் பள்ளிகளில் corporal  punishment ஒழிப்புக்கு வழிகாட்டு நெறி முறை கள் வகுக்கப்பட்டதாக செய்திகள் வருகிறது. நேர்காணலில் கார்லா, மாணவர்களின் கேள்விக்கு, “அதீத ஆர்வத்துடிப்பு, எதிர்பாரா தீங்கு களைச் சந்திக்க வைக்கும்” என்ற அர்த்த தொனி யுடன் கூடிய “curiosity killed the cat” என்ற சொற்றொடரை பதிலாகக் கூறுவாள். இது இவளது  அனுபவ வார்த்தையாக இருந்தாலும், பொருத்த மான வசனம்.  பள்ளி வளாகத்தை விட்டு கதையும், கேமரா வும் வேறெங்கும் நகரவில்லை. கதையின் போக்கோடு, ஆசிரியை கார்லா, மாணவர்களின் முகபாவங்களை வெவ்வேறு கோணங்களில் காண்பித்து, அவர்கள் மனதின் நுண் உணர்வு களை நுட்பமாக காட்சிப் படுத்தியுள்ளார் ஒளிப்பதி வாளர் ஜூடித் ஹாஃப்மேன். ட்ரும்....ட்ரும்....என்ற சிறு ஓசையோடு தொட ரும் வயலின் இசை மூலம் கார்லாவின் மனப்பதற்றத்தை உணர்த்தும் மார்வின் மில்லர், பின்னணி இசையை வித்தியாசமாகவும், நேர்த்தி யாகவும் கையாண்டுள்ளார். வேகமான திரைக்கதை. கச்சிதமான படத்தொகுப்பு. மேற்கத்திய சமூகப் பிரச்சனைகளை பேசியும், இயக்கியும் தனி முத்திரை பதித்துள்ளார் இயக்கு நர் இல்ஹர் காடாஹ். 2024க்கான வெளிநாட்டு சிறந்த படப் பிரி விற்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம்.உலகின் பல திரைப்படவிழாக்களில் திரை யிடப்பட்ட படம்.ப்ரைம் அமேசானில் காணலாம்.