வணிக சிலிண்டர் விலை உயர்வு
சென்னை: நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக் கான சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக் கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,965 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கச்சா எண் ணெய் விலை உயரும் போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயர் வது வாடிக்கையாக உள்ளது. மார்ச் 1 அன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறி விப்பின்படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன் பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.5.50 உயர்த்தப் பட்டு, ரூ.1,965 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வீட்டு சமையல் எரிவாயு உருளை விலை யில் மாற்றமில்லை.
விஜய் தனித்து போட்டியாம்!
சென்னை: நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்.2 ஆம் தேதி தொடங்கி னார். இந்நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்த லில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேர மாட்டார். விஜய் தனித்து போடியிடு வார் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 5 கூட்டம்: பாஜக பங்கேற்காது
திருப்பூர்: முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக பங்கேற்காது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கூட்டத்தில் பங்கேற்காத தற்கான காரணங்களை, முதலமைச்சருக்கு எழுதி யுள்ள கடிதத்தில் தெரிவித் துள்ளதாகவும் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
பாஜக தமிழகத்தை வஞ்சிக்கிறது
சென்னை: பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் திட்டங்களுக்கு நிதி வழங்கும் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியைகூட தர மறுத்து வஞ்சிக்கிறது என்று தவாக தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கூறியுள்ளார்.