சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தானில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ஆனால் 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிஇன்றும் நடைபெற்றுவருகிறது.ரயில்வே தண்டாவளப்பகுதியில் இரும்பு கர்டர்களால் ஆனபாலமும், இருபுறமும் தூண்களுடன் கூடிய கான்கிரீட் பாலமும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. இருபுறமும் அணுகு சாலையும், பாலம் முடியும் இடத்தில் சாலை அமைக்க வேண்டியதும் தான் பாக்கி. இந்தப் பாலம் கட்ட நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் பல பாலங்களை கட்டி முடித்திருக்க முடியும். ஆனால் தற்போதைய நிலைக்கு காரணம், அலட்சியப் போக்கா? பணப் பற்றாக் குறையா? பணப் பங்கீட்டில் பிரச்சனையா? ஆளுங்கட்சியின் முட்டுக்கட்டையா? எனத் தெரியாமல் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 15 கிராமமக்கள் தினம் தோறும் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். மதுரை-சென்னை இருப்புப்பாதை வழித்தடத்தில் சோழவந் தான் உள்ளதால் இங்குள்ள ரயில்வே கேட் நாளொன்றுக்கு 70முறை பூட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழைபெய்தால் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இப்பகுதி மக்கள் சேற்றில்நாற்று நட்டு, உருளும் போராட்டமும் நடத்தி விட்டார்கள். தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் இந்தப் பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணவில்லை.
வாரத்தில் குறைந்தது இரண்டு நபர்களாவது பாலம் பகுதியில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். காவல்துறையும் இது குறித்து உரிய வழியில் அரசின்கவனத்திற்கு கொண்டு சென்றுள் ளது. ஆனாலும் நடவடிக்கை ஏதுமில்லை.இது குறித்து குருவித்துறையைச் சேர்ந்த வேல்பாண்டி என்பவர் கூறுகையில், “கொரோனா காலத்திற்கு முன்பாக ஒரு நாள் காலை 8.25 மணியளவில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர் கள், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் கார்கள் சோழவந்தானில் மதுரை- திண்டுக்கல் மின்மயமாக்கப்பட்ட இரட்டை பாதையின் இருபுறமும்காத்திருந்தன. ஒரு ரயில் கடந்துசென்றதும், ரயில்வே கேட் திறக் கப்பட்டது. நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் வேகவேமாக ரயில்வே கேட்டை கடந்து சென்றனர். அப்போது சைரன் கதறலுடன் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. ரயில்வேகேட்டைத் கடக்க சுமார் 10 நிமிடங்கள்போராடியது. ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு முறையாவது 108 ஆம்புலன்ஸ் கடந்து செல்லும். அப்போதெல்லாம் ரயில்வே கேட் மூடியிருந்தால் நோயாளிகள் பாடு திண்டாட்டம் தான்” என்றார். \மேலும் அவர் கூறுகையில் காலை 7 மணி முதல் ஒன்பது மணிக்குள் ஐந்து ரயில்கள் கடந்து செல்கின்றன. “பீக் அவர்ஸ்” நேரத் தில் என்ன நடக்கும் என்பதை யூகித்துக்கொள்ளுங்கள் என்றார்.
போராட்டம் தான் தீர்வு
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர்மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் கூறுகையில், “ஆண் டுக்கணக்கில் பாலம் வேலை நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் முடியவில்லை. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்தக் கோரிக்கையின் மீது மாவட்ட நிர்வாகம், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் பாலம் பணியை விரைவு படுத்த வலியுறுத்தியும் பேரணி-ஆர்ப்பாட்டம் நடத்துவது, வர்த்தகர்களையும் இணைத்து அவர் களையும் கடைகளை அடைக்கச் சொல்வது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்தக் கோரிக்கையில் அனைத் துக்கட்சிகளின் கருத்துக்களையும் பெற்று விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.