tamilnadu

img

குறுவை சாகுபடி பாதிப்பை மாநில அரசு ஈடுகட்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து “முதலமைச்சரின் இலங்கை நிவாரண நிதிக்கு ரூ.10லட்சத்திற்கான காசோலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் ஆகியோர் வழங்கினர்.

சென்னை, ஆக.5- குறுவை சாகுபடியின் போது வெள்ள பாதிப்பு மற்றும் இயற்கை இடர்பாடு ஏற்பட்டால்,  அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நட்டத்தை மாநில அரசு தனது சொந்த நிதியிலிருந்து வழங்கும்; எனவே, விவசாயிகள் கவலை கொள்ள தேவையில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் ஆகியோர் வெள்ளி யன்று (ஆக.5) சந்தித்தனர். அப்போது இந்த  உறுதியை முதலமைச்சர் அளித்ததாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  கே. பாலகிருஷ் ணன் கூறினார். அவர்மேலும் கூறியதாவது: 

இலங்கைக்கு நிதி ரூ.10லட்சம்

நமது அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இதனால், தமிழ் மக்களும் இலங்கை மக்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிதி வசூலிக்கப்பட்டு அரிசி,பழம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முதலமைச்சர் அனுப்பி வைத்தார். அத்துடன், இலங்கை மக்களுக்கு உதவிட நிதியளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரிடம் வழங்கினோம். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம், அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் தொடர்பாகவும், மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் பள்ளி-கல்லூரி மாணவிகளின் தொடர் மரணம் குறித்தும் முதலமைச்சரின் கவனத்துக்கொண்டுசென் றோம். அதுகுறித்து விரிவான மனு ஒன்றையும் கொடுத்துள்ளோம். (மனு விபரம் : பக்கம் 4)

மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு காரண மாக இருக்கும் உண்மை குற்றவாளிகள் எந்த சூழ்நிலையிலும் தப்பித்துவிடக்கூடாது. அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை களையும் எடுக்க வேண்டும் என்று  முதலமைச்சரி டம் கேட்டுக்கொண்டோம். அதேபோன்று, பள்ளி-கல்லூரிகளில் மாணவிகளின் மரணம்  தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதுகுறித்து விரிவான ஆய்வு நடத்து வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் அரசு எந்தவித தயக்கமும் இல்லாமல் உறுதியாக  நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் இதில் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்து உரிய எடுக்க வேண்டும் அரசு உறுதியாக இருக்கிறது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 

குறுவை: பயிர் இன்சூரன்ஸ்

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்கு பயிர் இன்சூரன்ஸ் திட்டம் அறிவிப்பது வழக்க மாகும். ஆனால், இந்த முறை ஏஜென்சி நிறு வனங்கள் முன்வரவில்லை. இதனால் குறுவை  சாகுபடிக்கான இன்சூரன்ஸ் திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை. இந்த நிலையில், சம்பா சாகுபடிக்கு மட்டும் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவித்திருக்கும் அரசு அதற்காக நிதியையும் ஒதுக்கீடு செய்திருக்கிறது. குறுவை சாகுபடி விடுபட்டது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தோம். இதற்கு விளக்கம் அளித்த முத லமைச்சர், குறுவை சாகுபடியில்வெள்ள பாதிப்பு மற்றும் இயற்கை இடர்பாடு ஏற்பட்டால், அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நட்டத்தை மாநில அரசு தனது சொந்த நிதியிலிருந்து வழங்கும். எனவே, விவ சாயிகள் கவலை கொள்ள தேவையில்லை என்று உறுதியளித்துள்ளார்.

போக்குவரத்து பேச்சுவார்த்தை

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய  உயர்வு பேச்சுவார்த்தை நடந்துகொண்டி ருக்கிறது. இதில் பெரும்பகுதியான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அதிமுக ஆட்சி யின்போது நீண்டகாலமாக நிலுவையிலுள்ள பஞ்சப்படி(டிஏ) அரியர்ஸ் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டோம். நிலுவையில் இருக்கும் அரியர்ஸ்  தொகையை வழங்குவதற்கு நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊதிய மாற்று பேச்சுவார்த்தையும் உடனடியாக முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.  குமரி மாவட்டத்தில் காவல்துறை மிக மோசமாக நடந்துகொள்வது குறித்தும்  முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு  சென்றோம். இதுகுறித்து உடனடியாக விசாரிக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்பாவிகளை விடுதலை செய்க!

கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில்  அளித்த கே.பாலகிருஷ்ணன்,“கள்ளக்குறிச்சியில் நான்கு நாட்கள் தாமதம் ஏற்பட்ட தால் அந்த பிரச்சனை கலவரமாகவெடித்தது. அந்த வன்முறையை நாங்கள் ஒருபோதும்  ஏற்றுக்கொள்ளவில்லை. அது கண்ட னத்துக்குரியது. வன்முறையில் ஈடுபட்ட வர்கள் கைது செய்யப்படவேண்டும். அதில்  மாறுபட்ட கருத்தில்லை. ஆனால், இந்த வன்முறையை காரணம் காட்டி கைது செய்துள்ள அப்பாவிகளை விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம்” என்றார். நீதிமன்றங்களும் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்பதையும் முதலமைச்சரிடம் கூறியிருக்கிறோம். குறிப்பாக, இரண்டாவது உடற்கூராய்வு செய்யும்போது ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்கிற ஸ்ரீமதியின் பெற்றோரின் கோரிக்கையைகூட நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாதது வருத்தமளிக்கிறது என்றும் கூறினார்.