சென்னை, மார்ச் 7- உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை இந்தியாவில் தொடர உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி யுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:- உக்ரைனுக்கும் ரஷ்யா விற்கும் இடையே நடைபெற்று வரும் போரில் சிக்கித் தவிக் கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை மீட்டு அழைத்து வருவதில் இந்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சி களை அங்கீகரிக்கும் அதேவே ளையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்வதில் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்க வேண்டிய அவசியம் குறித்து பிரதமரின் கவனத்தை ஈர்க்க விரும்புவதாக, அவ ருக்கு எழுதிய கடிதத்தில் முதல் வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள் ளார்.
போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை 1200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாண வர்கள் தமிழகத்துக்கு திரும்பி யுள்ளனர் என்று தெரிவித்துள்ள முதல்வர், எஞ்சியுள்ள மாண வர்களும் வரும் நாட்களில் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டு, தற்போதைய சூழ்நிலை, அம்மாணவர்களின் படிப்பினை சீர்குலைத்துள்ளதாகவும், அவர் களின் எதிர்காலம் அச்சுறுத் தலில் உள்ளது என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள் ளார். மேலும், உக்ரைனில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது நிலவும் சூழ்நிலையில், இந்த மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் உள்ள தங்கள் கல்லூரிகளுக்குத் திரும்புவதும், படிப்பைத் தொடர்வதும் நடைமுறையில் சாத்தியமில்லை என்று குறிப் பிட்டுள்ள முதல்வர், போர் நிறுத்தப்பட்ட பின்னரும், பல் கலைக்கழகங்களில் இயல்பு நிலை திரும்பும் வரையிலும் இந்த நிச்சயமற்ற நிலை நில வும் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தப் பிரச்சினை யில் பிரதமர் அவசரமாகத் தலை யிட்டு, சிறப்புக் கவனம் செலுத்தி, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தொடர் புடைய அமைச்சகங்களின் கவ னத்திற்கு கொண்டு சென்றிட வேண்டுமென்று தெரிவித்துள்ள முதல்வர், உக்ரைனில் தங்க ளது படிப்பு தடைபட்ட நிலை யில், அம்மாணவர்கள் இந்தியா வில் உள்ள மருத்துவக் கல்லூரி களில் தங்களது படிப்பைத் தொடர உடனடியாகத் தீர்வு காண உரிய வழிமுறைகளைக் கண்டறிய உத்தரவிடப்ட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளதோடு, இது தொடர்பாக இந்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக ளுக்கும் தமிழக அரசு தனது இடைவிடாத ஆதரவை அளிக் கும் என்று தான் உறுதியளிப் பதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.