tamilnadu

img

பொதுத்துறை வங்கிகளை பாதுகாத்திடுக!

சேலம், செப்.25- வங்கிகளை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட்டு, தொடர்ந்து பொதுத்துறையாகவே பாதுகாக்க வேண்டும் என கனரா வங்கி பணியாளர் சங்கம் வலி யுறுத்தி உள்ளது. இந்திய வங்கி ஊழியர் சம்மேள னத்துடன் (பெபி) இணைந்துள்ள கனரா வங்கி பணியாளர் சங் கத்தின் (CBSU) 3 ஆவது தமிழ்  மாநில மாநாடு, சேலம் நகரில் மாநி லத் தலைவர் ஆர்.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் கொடியை மகேஸ்வரன் ஏற்றி வைத்தார். மத்திய செயற்குழு உறுப்பினர் எம்.ராஜாபிரபு வர வேற்புரையாற்றினார். இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் எஸ்.ஹரிராவ் மாநாட்டினை துவக்கி வைத்து உரையாற்றினார்.  தென்  மண்டல காப்பீட்டு ஊழியர் சம் மேளனத்தின் துணைத்தலைவர் ஆர். தர்மலிங்கம் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி.ஆர்.அஜ்ஜு மகேந்திரன் அறிக்கை சமர்ப்பித்தார். சிண்டிகேட் வங்கி பணியாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் என். சுப்பிரமணியன், இந்திய வங்கி ஊழி யர் சங்க மாநில செயலாளர் எஸ்.ஏ. ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் எஸ்.தீனதயாளன், மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.ரகுபதி உட்பட  பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை யாற்றினர்.

புதிய நியமனங்கள் இல்லை

இம்மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு: நமது தேசத்தின் ஒட்டு மொத்த வங்கித்துறையின் வணிகம் 167 லட்சம் கோடி. ஆனால், நாடு முழு வதும் ஒட்டு மொத்த வங்கிக் கிளை கள் 1,52,530 மட்டுமே உள்ளன. குறிப்பாக கனரா வங்கியில், கடந்த வருட மொத்த வணிகம் ரூ.17.39 லட்சம் கோடி.  நாடு முழுவதும் தற் போது 9,700 கிளைகள் உள்ளன.  கிளைகளில் பணிபுரியும் எழுத்தர் களின் எண்ணிக்கை என்பது 21,856 மட்டுமே. ஒவ்வொரு வருட மும் பணி ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 4000 ஆகும்.  ஆனால், அதற்கேற்ற விதத்தில் புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப் படுவது இல்லை. இந்த வருடம் 2023ல் கூட அகில இந்திய அளவில் கனரா வங்கி எழுத்தர்களுக்கான காலிப் பணியிடம் வெறும் 564ஆக மட்டுமே அறிவித்துள்ளது. இத்த கைய நிலைமை வங்கி வாடிக்கை யாளர்களின் தேவையை நிறை வேற்றக் கூடிய விதத்தில் இல்லை.  இதை எதிர்த்து இந்திய வங்கி ஊழி யர் சம்மேளனமும், கனரா வங்கி பணியாளர் சங்கமும் தொடர்ந்து போராடி வருகின்றன.

சுரண்டப்படும் தற்காலிக ஊழியர்கள்

மறுபுறம், வங்கிகள் இந்த ஊழியர் பற்றாக்குறையை ஈடு செய்யாமல் வங்கிப் பணிகளை அயல்பணி முறையில் (அவுட் சோர்சிங்) தனியார் நிறுவனங் களுக்கு அளிக்கின்றன. சமீபத்தில் கனரா வங்கி நிர்வாகம் அலுவலக பராமரிப்பு பணிகளை காண்ட்ராக்ட் விட எடுத்த முயற்சிகளை எதிர்த்து சங்க ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராடி வருகின்றோம். அதே போன்று, தற்காலிக முறையில் பல்லாயிரக்கணக்கான தினக்கூலி ஊழியர்கள் மற்றும் வணிக முக வர்கள் பல ஆண்டுகளாக பணி நிய மனத்திற்கான வாய்ப்புகள் ஏது மின்றி, சுரண்டப்பட்டு வருகின்றனர்.

லாபம் முழுவதும் வராக்கடனுக்காக?

பெரு நிறுவனங்களுக்கு கடன் அளித்து வசூலாகாத வராக் கடன் கள் ஒவ்வொரு வருடமும் பன்மடங்கு உயர்ந்து வருகிறது. உதாரணத் திற்கு, பொதுத்துறை வங்கிகள் கடந்த 13 ஆண்டுகளில் ஈட்டிய மொத்த லாபம் ரூ.15,97,458 கோடி.  அதில் வராக்கடனுக்காக ஒதுக்கப் பட்ட தொகை ரூ.14,42,001 கோடி. ஒட்டு மொத்த வங்கித் துறையின் வருமானத்தை கார்ப்பரேட்டு களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. அதை ஈடு செய்ய ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் சலுகைகளை வெட்டுவது, ஊழியர்கள் எண்ணிக் கையை குறைப்பது போன்ற நட வடிக்கைகள் திணிக்கப்படுகின்றன. மேலும், வங்கிச் சேவைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாபத்திற்காக வங்கி ஊழியர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் சுமையை திணிக்கும் ஒன்றிய அரசின் பொரு ளாதார கொள்கை மிகப் பெரும் பாதிப்பை மக்களுக்கும்  வங்கித் துறைக்கும் உருவாக்கியுள்ளது.மாநாடு இதை வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் புதிய பணி நியமனம், காண்ட்ராக்ட் மற்றும் தினக்கூலி ஊழி யர்களின் பணி நிரந்தரம், பெண் ஊழியர்களுக்கு தனி கழிப்பறை, பிரசவ கால விடுப்பு அதிகரிப்பு உள்ளிட்ட உரிமைகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளை பாது காக்க வங்கி நிர்வாகங்கள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.

புதிய நிர்வாகிகள் தேர்வு

மாநாட்டின் நிறைவில் சங்கத்தின் மாநிலத் தலைவராக எஸ்.பிரேம லதா (சென்னை), உதவித்தலைவ ராக மதனகோபால் (மதுரை), செய லாளராக வி.ஆர்.அஜ்ஜூ மகேந் திரன் (சென்னை), இணைச் செய லாளராக சிவலிங்கம் (கோவை), பொருளாளராக பி.டி.ரங்கராஜன் (சென்னை) ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஏன்.ராஜ கோபால் உரையாற்றினார்.

 

;