tamilnadu

img

இடதுசாரி கட்சிகளின் கரத்தை வலுப்படுத்துவோம்!

செங்கல்பட்டு, செப். 21- ஜனநாயகத்தை. அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க இடது சாரிக் கட்சிகளின் கரத்தை வலுப்படுத் துவோம் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில மாநாட்டில் தலை வர்கள் அறைகூவல் விடுத்தனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கவுரவ தலைவர் பி.சம்பத் பேசுகை யில், மத்தியில் காந்தியைச் சுட்டுக் கொன்ற ஆர்எஸ்எஸ் மதவெறி கூட்டங்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் சாதா ரண ஏழை எளிய மக்கள், தொழிலா ளர்கள் குறித்து அக்கறை கிடை யாது. அதனால்தான் அனைத்து பொது த்துறை நிறுவனங்களையும் தனியாரி டம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  இதற்கு எதிராகப் போராட்டங்கள் எழுந்தால் அதை  ஒடுக்குவதற்காக ஏரா ளமான  எதேச்சதிகார சட்டங்களைக் கொண்டு வந்து ஜனநாயக உரிமை களைப் பறிக்கிறார்கள். எனவே ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து சாதி, மதம் கடந்து அனை வரும் போராட முன்வர வேண்டும். இடதுசாரி கட்சிகளின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். என அவர் கேட்டுக் கொண்டார்.

தாவுத் மியாகான்

கல்வியாளர் தாவுத்மியாகான் பேசு கையில், மாற்றுத் திறனாளிகளை ஒரு மனிதனாகவே ஆட்சியாளர்களும், சமூகமும் மதிப்பதில்லை. பொருளா தார ரீதியாக மிகவும் பின்தங்கி இருப்ப வர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது  அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை. அதேபோல் மாற்றுத் திறனா ளிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட் டுள்ளது. எங்கள் கல்லூரிக்கு அடிக்கடி ஆய்வுக்கு வரும்  அதிகாரிகள்   சமுக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்வார்கள், ஆனால் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்தது இல்லை. எனக்கு அதை  நினைவூட்டியவர் தோழர் தெ.லட்சுமணன். அதன் பிறகு தான்  அந்த சட்டத்தைப் படித்து எங்க ளது கல்லூரியில் அதை அமல் படுத்தி வருகின்றோம்.  மாற்றுத்திறனா ளிகளுக்கான தனி ஆணையம் அமைக்க வேண்டும். தென் மாநிலங் களைப் போல் தமிழகத்திலும்  மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டு

செல்வம்

 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் பேசுகையில், ஜாக்டோ -ஜியோ மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் இந்த ஆட்சி அமை வதற்கு அரசு ஊழியர்களும், ஆசிரி யர்களும்தான் காரணம் என்றார்.  உங்களது கோரிக்கைகளை நிச்ச யமாக நிறைவேற்றுவேன் என்று கூறி னார். ஆனால் இரண்டு மாநாட்டிற் கும் நம்பிக்கையோடு வந்த அரசு ஊழியர்களும், மாற்றுத்திறனாளி களும்  ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர். கடந்த காலங்களில் நாம் போராடி சலுகைகளைப் பெற்றது போல், தற்போதும் நமது சலுகை களைப் போராடித்தான் பெற வேண்டி யுள்ளது. கரத்தாலும், கருத்தாலும் ஒன்றுபட்டுப் போராடுவோம், நமது உரிமைகளை மீட்டெடுப்போம் என்றார்.

எஸ்.கண்ணன்

சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் பேசுகை யில், நம்மிடத்தில் ஏராளமான உடல் உபாதைகள் உள்ளன.  பிறர் கேலி செய்வதால் வலி உள்ளது.  ஆனால் உட லில் உறுதி இருக்கிறது. அமைப்பு இருக்கிறது. போராட்டம் இருக்கிறது. முன்னேற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பணியின் போது உடல் ஊனமுற்றால் வேலை செய்யத் தகுதியற்றவர் என்று வேலையை விட்டு நீக்குகின்றனர்.  சட்டம் இருந்தும் கூட வெளியில் அனுப்பும் ஏற்பாடு உள்ளது. தனியார் முதலாளிகளுக்கு ஆதர வாகச் சட்டங்களை மோடி அரசு திருத்தி வருகிறது. திருபெரும்புதூரில்  நோக்கியா கைப்பேசி தயாரிக்கும் நிறுவனத்தில் 2010ஆம் ஆண்டு  அம்பிகா என்ற இளம் பெண்  பணி செய்து கொண்டிருந்த போது அவரது தலைமுடி இயந்தி ரத்தில் சிக்கி, அவரது உடலும் இயந்தி ரத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டது. அவரை காப்பாற்றுமாறு தொழிலா ளர்கள் கதறினர். ஆனால்  ‘இயந்தி ரத்தை நிறுத்தினால் 3 கோடி ரூபாய் நஷ்டமாகும். அந்த பெண் இறந்து சடலமாக  வெளியே வந்தால் அதிக பட்சமாக 10  லட்சம் ரூபாய்தான் செல வாகும்’’என நிர்வாகம் கூறியது. முதலா ளிக்கு உயிரா, லாபமா என்றால் லாபம்தான் முக்கியம். ஆனால் இடது சாரி கட்சிகளும், சிஐடியுவும் உயிர் தான் முக்கியம் எனக் கூறுகின்றன. எனவே தனியார் மயத்தை எதிர்த்து வலுவான போராட்டத்தை முன்னெ டுக்கவேண்டியது அவசியம்  என்று அவர் குறிப்பிட்டார்.

பி.சுகந்தி

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர்  பி.சுகந்தி பேசுகையில் , பல்வேறு அமைப்புகளுக்கு வழிகாட்டியாக  மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் போராட்டங்கள் அமைந்துள்ளன.  சோவியத் யூனியனில்  புரட்சிக்குப் பிறகு மாற்றுத் திறனாளிகள் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான ஒரு திட்டத்தை லெனின் துவக்கி வைத்தார். சீனாவில் மாற்றுத்திறனாளிகள் குறித்த முழுமையான புள்ளி விவரங் களைச் சேகரித்து அவர்களுக்கென 2  ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சாதாரண பள்ளிகளிலும் மாற்றுத்திற னாளிகள் பயில்வதற்குரிய சிறப்புகள் நடத்தப்படுகிறது. கம்யூனிச அரசுகள் மட்டுமே அனைத்து சமூகத்தினர் குறித்தும் கவலைப்படும் அரசாக உள்ளது. மாற்றுத்திறனாளிகள் குறித்த இலக்கியங்கள் பொது வெளியில் கொண்டுவர இன்றைய எழுத்தா ளர்கள் முன்வர வேண்டும். பொது வெளியில் அதிகமாகப் பேசப்படும் போதுதான் கோரிக்கைகள் வலுப் பெறும், பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்றார். அனைத்து பிரிவினருக்கும் எதிரான ஒரு ஆட்சி மத்தியிலே நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. எனவே இதற்கெதிரான போராட்டத்தை அனைத்து பிரிவி னரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதையும் இணைந்து செய்வோம் என்றார் சுகந்தி.



 

 

;