புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடுகள் திருடும் கும்பலை பிடிக்க முயன்றபோது கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட திருச்சி சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை மறைந்த பூமிநாதனின் மனைவி கவிதா மற்றும் மகன் குகன்பிரசாத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின்போது, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் உடனிருந்தனர்.