tamilnadu

img

குண்டு வைப்பதுதான் சனாதன மாடல்

திருவாரூர் மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் சாடல்

திருவாரூர், செப்.5- திருவாரூர் தெற்கு வீதியில் ஞாயிற்றுக் கிழமை சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல்  விளக்க மாநாடு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன் முன்னிலை வகித்தார். இம்மாநாட்டில் திமுக அமைப்பு செய லாளர் ஆர்.எஸ்.பாரதி, மதிமுக அரசியல்  ஆய்வு மைய செயலாளர் செந்தில்அமு தன், சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர்.முத்தர சன், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் உரை யாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசு கையில், சனாதனம் என்பது இந்தியாவில் மீண்டும் கோலோச்ச வேண்டும் என்பதே பாஜகவின் செயல்திட்டமாக இருக்கிறது. அரசியலமைப்பு சாசனத்தையே சிதைக் கிற வேலையை செய்கிறார்கள். சமீபத்தில் கூடிய சாதுக்கள் மாநாடு ஒரு வரைவு அர சியலமைப்பு தீர்மானத்தை முன்மொழிந்தி ருக்கிறது.  அது முற்றிலும் சனாதன வர்ணாசிரம சமூகத்தை நிலை நிறுத்துவதற்கான தந்தி ரமே. இது அரசியலமைப்பு சாசனத்துக்கே எதிரானதாகும். மகாராஷ்டிர மாநில உயர்நீதி மன்றத்தில் ஒரு குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் கொடுத்த வாக்கு மூலத்தில், “நாங்கள் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் மூலம் குண்டு செய்யவும், குண்டு வைக்கவும் தேவையான பயிற்சி பெற்றவர்கள். அப்படி குண்டு செய்கிற போது தவறுதலாக வெடித்துவிட்டது” என தெரிவித்துள்ளார். இப்படி குண்டு வைக்கிற மாடல்தான் சனாதன மாடல். அது தங்களுக்கு தகுந்  தாற்போல் உச்சநீதிமன்றத்தை வளைக்கி றது. குற்றவாளிகளை தேடிப் பிடித்து கட்சி யில் சேர்த்து அவர்களை கலவரங்களுக்கு தயார் செய்கிறார்கள். எனவே இந்த சனா தன எதிர்ப்பு மாநாடு என்பது, தமிழகத்தின் அரசியல் பாரம்பரியத்தை பாதுகாக்கிற, மனிதநேயமிக்க மனிதர்களை உருவாக்கு கிற, பன்மைக் கலாச்சாரத்தை பேணுகின்ற மாநாடு. அத்தகைய சமத்துவத்தை பாது காக்கிற மாடல்தான் திராவிட மாடல்; அது தான் சமத்துவ மாடல் என்றார்.

சனாதனத்தை சாடு;  சமத்துவத்தை நாடு

சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர்.முத்தர சன் பேசுகையில், பிறப்பின் அடிப்படையில் பேதங்களை சொல்லி மக்களிடையே வெறுப்பை விதைப்பதுதான் சனாதனம். தமிழக ஆளுநர் தனது பொறுப்பின் கண்ணி யத்தை கெடுக்கும் வகையில், சனாதனம் குறித்து பிரச்சாரம் செய்கிறார். பாஜக, ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் காலூன்ற விட மாட்டோம். சனாதனத்தை சாடு; சமத்து வத்தை நாடு என்றார். பழைய வர்ணாசிரம சமூகம் மாறாமல் அப்படியே நிலைக்க வேண்டும் என விரும்பு வதே சனாதன ஆரிய மாடல். ஆனால் இவற்றையெல்லாம் மாற்றி சமூக நீதியை கொண்டு வருவதே திராவிட மாடல். மாற்றம்  இல்லாதது இவ்வுலகில் எதுவுமே இல்லை. அதைத்தான் பவுத்தமும், மார்க்சியமும் சொல்கிறது. இந்தியா முழுவதும் பரவி யிருந்த திராவிட மரபினத்தின் சமூக  அமைப்பில், முற்போக்கான மாறுதல் களைக் கொண்டு வருவதே சனாதன எதிர்ப்பு.  அதுவே திராவிட மாடல் என பேசினார். 

சனாதன தர்மம் என்பது  இந்து தர்மமே! 

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், காசி பனாரஸ் இந்து பல்க லைக்கழகத்தில் பாடமாக இருந்த சனாதன தர்மா எனும் புத்தகத்தில், சனாதன தர்மம் என்பது இந்து தர்மமே எனத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒரு மதச்சார்பற்ற நாட்டின் அரசியலமைப்பாக ஒரு மதத்தின் தர்மம் இருக்க முடியாது. சனாதன தர்மம்  என்பதை இன்று ஆரியர்களே கூட ஏற்றுக்  கொள்வதில்லை. அத்தகைய பிற்போக்கான மனுநீதியை தமிழக மண்ணில் காலூன்ற விடமாட்டோம் என்பதற்காகவே, இத்தனை அமைப்புகளும் இன்று கூடியுள்ளோம். இதனை தமிழகம் முழுக்க நடத்துவோம் என்றார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் மதிமுக சார்பில் செந்தில்அமு தன் ஆகியோர் பேசுகையில், திருவாரூர் தெற்கு வீதிக்கு கலைஞர் வீதி எனப் பெயரி டுவதே மிகப் பொருத்தமானது. அவர் சனா தனத்துக்கு எதிராக செயல்பட்டதாலேயே பாஜக இதனை எதிர்க்கிறது என்றனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட இப்பொதுக்கூட்டம், கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெறு வதாக இருந்து, மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

;