tamilnadu

img

பீகார் மாநில பாஜக தலைவரின் கொலைவெறி

பாட்னா, டிச.22- பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியின் நாக்கை அறுப்போருக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பாஜக தலைவர் கஜேந்திர ஜா வன்முறை யைத் தூண்டும் வகையில் பேசி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார். பீகார் மாநிலத்தின் முதல் தலித் முதல் வர் என்ற பெயரைப் பெற்றவர் ஜிதன் ராம் மாஞ்சி. ஐக்கிய ஜனதாதளம் கட்சி யிலிருந்த அவர், பின்னர் அதிலிருந்து விலகி ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியை நடத்தி வருகிறார். ஆளும் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார். இதனிடையே, தலித் மக்கள் பெருமள வில் கூடிய நிகழ்ச்சி ஒன்றில் அண்மை யில் ஜிதன் ராம் மாஞ்சி பேசியுள்ளார். அப்போது, பிராமணர்களின் ஆதிக்கம், தீண்டாமை, சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து அவர் பேசியதாகக் கூறப்படு கிறது. இந்நிலையிலேயே, “மாஞ்சியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன். அத்துடன் அந்த நபரின் வாழ்நாள் செலவுகளையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்” என்று பீகார் மாநில பாஜக செயற்குழு உறுப்பினரும், உலக ஹிந்து மகா சபா பொதுச்செயலாளருமான கஜேந் திரா ஜா வன்முறையைத் தூண்டியுள்ளார்.

“பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி மீண்டும் மீண்டும் பிரா மணர்களுக்கு எதிராகப் பேசி வருகிறார். அவருக்கு கண்ணியமும் இல்லை. இந்து மதத்தின் மீது நம்பிக்கையும் இல்லை. இனியும் அவரது பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாது” என்று மிரட்டியுள்ளார். இது பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், “யாருக்கு மாஞ்சி யின் நாக்கை அறுக்கத் தைரியம் இருக்கி றது? பாஜக தலைமை அதன் தலைவர் களைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லை யெனில் விளைவுகளைச் சந்திக்கத் தயா ராக இருக்க வேண்டும்” என்று ஹிந்துஸ் தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் டேனிஷ் ரிஸ்வான் எச்சரித்துள்ளார். இதேபோல பலரும் பாஜக தலைவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நிலை யில், கஜேந்திர ஜாவை பாஜக தற்போது கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

;