tamilnadu

img

மரத்துக்கு பகுத்தறிவு உண்டா? - கணேஷ்

ஜன்னல் வழியாக வகுப்பைத் தாண்டுகையில், சிலர் கைககளைத் தலைக்கு முட்டுக்கொடுத்து பாதித் தூக்கத்தில் இருப்பதையும், சிலர் கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது..
அதனால் உள்ளே நுழைவதற்கு முன்பாக, கொஞ்சம் தள்ளிச் சென்று கொண்டிருந்த மற்றொரு ஆசிரியரிடம் பேசுவதுபோல் பாசாங்கு காட்ட வேண்டிய நேர்ந்தது. எதிர்பார்த்தது போலவே மாணவர்கள் நேராக அமர்ந்து கொண்டார்கள்.
என்ன... மேட்ச் பாத்தீங்களாக்கும்..
சோகமாகவே பதிலும் வந்தது..
என்ன ஆச்சு..
சிஎஸ்கே தோத்துருச்சு..
இவ்வளவுதானா... கிரிக்கெட் பாக்கலையா..?
கிரிக்கெட்.. ஐபிஎல்தான் சார்..
அதான் நானும் கேட்டேன். நாலு மணிநேரம் பாத்தா, பந்து சுழலுதா, வேகமாப் போகுதா, வேணும்னே மெதுவாப் போடுறாரா, மட்டைய எப்புடி சுழற்றுறாரு.. வாய்ப்பே தராம ரன் குவிக்குறது.. எவ்வளவு கவனமா நடுவர் இருக்காரு.. இன்னும் சொல்லிட்டே போகலாம்..
மாணவர்கள் கண்கன் விரிந்தன..
அப்போ உங்களுக்குப் பிடிச்ச டீம், பிளேயர்னு எதுவும் கிடையாதா..
உண்டு... ஆனா, அவரு அவுட் ஆயிட்டா டி.விய அணைச்சுட்டுப் போயிர மாட்டேன்.. பிடிச்ச டீம், பிளேயர் இல்லாத ஆட்டத்தையும் பாப்பேன்..
உங்களுக்குப் பிடிச்ச பிளேயர் யாரு, சார்..?
குணங்குடி மஸ்தான் சாகிபு...
சாஆஆஆஆஆஆஆஆ....ர்...
உங்கள மாதிரி மேட்ச் பாத்தப்ப, ரிச்சர்டு ஹேட்லினு ஒருத்தர் வருவாரு.. பந்து அவர் சொல்ற மாதிரியெல்லாம் போற மாதிரி இருக்கும்... அவர SULTAN OF SWINGனு சொல்வாங்க... 
சார்... குணங்குடி மஸ்தான் சாகிபுனு சொன்னதுக்கும், அவருக்கும் என்ன சம்பந்தம் சார்..
இவரோட இயற்பெயர் சுல்தான் அப்துல் காதர்...
சார்... அப்படின்னா காசு வாங்கிட்டு விளையாடிட்டு, மாட்டிக்கிட்ட ஆட்டக்காரங்களப் பாத்தா, 
“காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத
ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே” னு புலம்புற மாதிரி நினைச்சுக்குவீங்க... அப்படித்தான..
அதேதான்.. இலக்கியம் படிக்குறப்ப அறிவியல்லாம் கூட நினைவுக்கு வரும்தானே..
ஆமா சார்.. படிச்சுருக்கோம்.. மழை எப்புடி உருவாகுதுன்னு முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறங், கார்நாற்பது, திருப்பாவைலாம் சொல்லுது..
ரொம்ப மழை பெய்யுற இடமா இருந்தா இந்த குணங்குடி மஸ்தான் சாகிபுக்கு புடிக்காதாம்..
அப்புடியா... ஆனா, அவரு புதர் மாதிரி இடம் இருந்தா ரொம்ப புடிச்சுப்போய் உக்காந்துக்குவாருன்னு படிச்சோம்..
ஆமா.. வட மாநிலங்கள்ல சுத்திட்டு வந்தவரு தமிழ்நாட்டுக்கு வந்தப்ப ரொம்ப புதரா இருக்குற ஒரு இடத்தத் தேடிக் கண்டுபிடிச்சு உக்காந்துக்கிட்டாரு.. 
இப்ப அந்த இடம் எங்க இருக்கு சார்..
அவரு பொறந்த ஊரு தொண்டி... அதனால அவர தொண்டியாருன்னு கூப்புடுவாங்க.. இவரு போய் உக்காந்த அந்தப் புதர்க்காட்ட இப்போ தண்டையார்பேட்டைனு சொல்றாங்க.. சென்னைல இருக்கு..
மழை பெய்யுற இடமா இருந்தா, புதர்க்காடா இருக்காதே... பருவமழைக்காடுகள். இல்லேனா அகன்ற இலைக்காடுகள்னு சொல்றோமே..
சரியாச் சொன்ன.. தமிழ்நாட்டுலயே பசுமை மாறாக்காடுகள், பருவமழைக்காடுகள், முட்புதர்க்காடுகள், சதுப்புநிலக்காடு, மலையகக் காடுன்னு அஞ்சு வகை இருக்கு..
பருவமலைக்காட்டுலதான் இலைகள் உதிரும்... 
ஆமா.. மரத்துக்குப் பகுத்தறிவு இருக்குனு வெச்சுக்கலாம்..
மரம் யோசிக்குமா சார்..?
ஈரப்பத இழப்பைத் தவிர்க்க இலைகள உதிர்க்குதுன்னு எடுத்துக்கலாமே..?
ஓ.. அத வெச்சு மரம் யோசிக்குனு சொல்ல வர்றீங்களா..
1905ல ஜகதீஷ் சந்திர போஸ் சொல்ற வரைக்கும் மரத்துக்கு உயிர் இருக்குனு நாம சொல்லயே..
நல்ல வேளை சார்.. மரம், செடி, கொடிலாம் படிக்க வந்து எங்களோட  போட்டி போடல.. சீக்கிரம் படிச்சு நல்ல வேலைக்குப் போயிரணும் சார். என்று நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்கத் தொடங்கினர்.

;