tamilnadu

புதுவையில் ஒப்பந்த பணியாளர்கள் நியமனம்

புதுச்சேரி,டிச.2- கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் புதுச்சேரி மாநிலத்தில் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைய 675 சுகாதாரப் பணியாளர்களை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் மேலும் 90 நாட்களுக்கு மீண்டும் பணியில் அமர்த்தவும் அதற்காக செலவினமாக ரூ. 3.51 கோடி ஒதுக்கீடு செய்தும் ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்க ளின் வேலை வாய்ப்புக்களை வரைமுறைப்படுத்தவும், அவர்களது நலனைப் பாதுகாக்கவும், மாநிலங்களுக்கு இடையேயான புலம் பெயர்ந்த தொழிலாளர் சட்டம் 1979 -இன் கீழ், உரிமம் வழங்கும் அதிகாரிகளாக புதுச்சேரி தொழிலாளர் அலுவலர் (அமலாக்கம்) காரைக்கால் தொழிலாளர் அலுவலர் ஆகியோரை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுமத்தின் திட்டங்கள், செயல்பாடுகளை மேம்படுத்தவும் டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தைப் பராமரிக்கவும் ரூ.90.47 லட்சம் நிதிக்கொடை வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

;