சென்னை, டிச.12- அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்ட மைப்பின் பொதுச்செயலாளர் பேரா.பொ.இராஜ மாணிக்கம், மருத்து உப குழு கன்வீனர் வி.ஆர். ராமன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நம் நாட்டிலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கை, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பொருளாதார வசதி குறைந்த பிரிவின ருக்கான ஒதுக்கீடு வழக்கு காரணமாக கடந்த ஒரு வருட காலமாக நடைபெறாமல் உள்ளது. ஒன்றிய அரசின் வேண்டுகோளை ஏற்று ஜனவரி 2022 வரை வழக்கை தள்ளி வைத்துள்ளது.
இத னால் மருத்துவப் பட்டப் படிப்பு முடித்தவர்கள் இந்த மேற்படிப்பின் மூலம் உறைவிட மருத்துவ சேவை செய்வதற்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது.இதன் காரண்மாக தற்போதைய மருத்துவக் கல்லூரி, மருத்துவ மனையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள் வேலைப் பளு அதிகரித்து 24 மணி நேரமும் பணி செய்யும் நிலையில் உள்ளனர்.நம் நாட்டில் மருத்துவ மனைகளும் மருத்துவக் கல்லூரிகளிலும் ஏற்க னவே வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் மாணவர் சேர்க்கை தாமதமாவதாலும் மருத்துவ சேவையை மேலும் மோசமாக்கி உள்ளது. ஒன்றிய அரசின் மருத்துவ சேர்க்கை கொள் கையின் காரணமாகவே இச்சேர்க்கை தடை பெற்று ஏற்கனவே வேலை பார்த்து வரும் உறை விட மருத்துவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு தற்போது அவசர காலப் பணி உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் புறக்கணித்து அகில இந்திய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் ஒரு முழுமையான அடிப்படை மற்றும் இரண்டாம் நிலை மருத்துவ சேவை களில் குறைபாடுகள் இருப்பதால் அனைத்து மருத்துவத்திற்கும் மருத்துவக் கல்லூரி மருத்து வமனைகளை மக்கள் நாடி வருகின்றனர்.
எனவே இந்தப் பிரச்சனையால் சாதாரண மக்களே இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட், கோவிட் அல்லாத அனைத்து உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தற்போதைய புதிய வகைக் கொரோனா வைரஸ் தாக்குதல் ஆரம்பித்தால் மேலும் மோசமாகும். தற்போதைய நீட் தேர்வு என்ற மத்தியத்து வப்படுத்தப்பட்ட சேர்க்கை முறை இதை மேலும் சிக்கலாக்கி உள்ளது. இந்த பிரச்சனையை ஒன்றிய அரசு பூதாகரமாகிவிட்டதால் இதனை சுமூகமாக முடிக்க அதுவே முயற்சி செய்ய வேண்டும். இருப்பினும் தற்போது ஒரு இடைக் கால நிவாரண நடவடிக்கையாக மருத்துவ பட்ட மேற்படிப்பு சேர்க்கையை நடத்திட வேண்டும். இந்த பிரச்சனை மூலம் நீட் தேர்வு முறையை யும் மத்தியத்துவப் படுத்தப்பட்ட தேர்வு முறை யையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும். தற்போதைய நிலையில் நீட் தேர்வு குறித்த பிரச்சனைகளில் நுழைந்து அதன் நல்லது கெட்டதுகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதை தாற்காலிகமாகத் தள்ளி வைத்து விட்டு, தற்போ தைய மருத்துவ பட்ட மேற்படிப்புச் சேர்க்கைக் கான கலந்தாய்வினை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து இருக்கும் மாணவர்களுக்காக உட னடியாக நடத்த வேண்டும் என அகில் இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது. மேலும் பொது சுகாதார சேவையை பலப் படுத்துவதற்கும் எதிர் வரும் உருமாறிய கோவிட் வைரஸ் புதிய அலையை எதிர்கொள்ள தயா ரிப்பும் அவசியம் என்பதால் மாணவர் சேர்ககை யை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.