tamilnadu

பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப ஆலோசனை

சென்னை,டிச.7- தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும்போது அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் எம்.எல்.ஏ.க்கள் பேசுவது அனைத்தும் வீடியோவாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு அதில் குறிப்பிட்ட பதிவுகள் தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்த பிறகு சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தற்போது கணினி மயமாக்கப்பட்டு விட்டது. இதற்கேற்ப சட்டவிதிகள் திருத்தம் செய்யப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் பேரவையில் கணினியுடன் மடி கணினி வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன்  அடுத்த கட்டமாக பேரவை நிகழ்ச்சி களை பொதுமக்களுக்கு நேரலையாக தொலைக்காட்சியில் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, தலைமைச் செயல கத்தில் தொழில்நுட்பத்துறை முதன்மை  செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் துணைத் தலைவர் பிச்சாண்டி, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

;