tamilnadu

img

தூய்மைப் பணி தனியார்மயத்தை கைவிடுக!

சென்னை,  ஜூலை 12 -   தூய்மைப் பணி தனியார்மயத்தை ரத்து செய்யக் கோரி புதனன்று (ஜூலை 12) தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில்  மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியை வெளிமுகமைக்கு (அவுட்சோர்சிங் ) விடுவது என்று  மாநில அரசு அரசாணை வெளியிட்டது.  தற் போது அதற்கான ஒப்பந்தப் புள்ளி  கோரும் அறிவிப்பையும் செய்துள்ளது.  தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனால், ஏற்கனவே பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின்  பணிப் பாது காப்பும், ஊதியமும்  கேள்விக்குறியாக்கப் பட்டுள்ளது. இந்த தொழிலாளர் விரோத  நடவடிக்கையை கண்டித்து ஆங்காங்கே  வேலைநிறுத்தம் உள்ளிட்ட வடிவங் களில் போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. இதன் தொடர்ச்சியாக அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஜூலை 12 அன்று மறியல் போராட்டம் நடத்த சிஐடியு அழைப்பு விடுத்தது. இதன் ஒருபகுதியாக பெருநகர சென்னை மாநக ராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகை முன்பு சிஐடியு சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் மறியல் நடைபெற்றது. தூய்மைப்பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடாது,  10 ஆண்டுகள் பணி புரிந்த என்எம்ஆர், என்யுஎல்எம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், மலேரியா, அம்மா உணவக தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிலாளர்கள் முழக்கங்களாக எழுப்பி னர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய சிஐடியு மாநிலச்செயலாளர் சி.திரு வேட்டை செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

மாநிலம் முழுவதும் தூய்மைப் பணி களை தனியார்மயமாக்க தமிழக அரசு  மூன்று ஆணைகளை (139, 152, 10)  வெளியிட்டுள்ளது. இதனால் உள்ளாட்சி களில் நிரந்தரப் பணியே இல்லாமல் போகும். தூய்மைப் பணிகளில் 99 விழுக்காடு தலித், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஈடுபடுகின்றனர். நிரந்தரப் பணிகள் அனைத்தும் ஒப்பந்த பணியாக மாற்றினால், விளிம்பு நிலை மக்களால் கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியாத நிலை உருவாகும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் கூட கிடைப்ப தில்லை. உழைப்புச்சுரண்டல் கொடூர மாக நடக்கிறது. உதாரணத்திற்கு நிரந்தர பணியில் உள்ள ஒரு ஊழியரின் ஊதி யத்தை, ஒப்பந்த ஊழியர்கள் 5 பேருக்கு பிரித்துக் கொடுக்கிறார்கள். அதாவது 5 பேரின் உழைப்பையும் ஒப்பந்த நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன. சென்னையில் உள்ள 15இல் 11 மண்ட லங்களில் குப்பை அள்ளும் பணி ராம்கே, உபேசர் என இரு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் முறையாக குப்பை அள்ளுவதில்லை. கடந்த வாரத்தில் சென்னை மாநகராட்சி ஆணை யர் கோடம்பாக்கத்தில் சென்று குப்பை அள்ளும் புகைப்படங்கள் வெளியானது. இந்த நிலையில் எஞ்சியுள்ள 4 மண்டலங்களையும் தனியார்மயமாக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இதனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். சென்னை மாநகராட்சி ஆணையர், மேயர் அளிக்கும் வாக்குறுதிகளை ஏற்கவில்லை. மாநகராட்சியே தூய்மைப் பணிகளை செய்ய வேண்டும். ஒப்பந்த முறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்வோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதற்கு மாறாக திமுக அரசு செயல்படுவது அநீதியானது. இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் மறியல் நடைபெறுகிறது.

ஒன்றிய அரசின் கொள்கையால் தற்போதுள்ள பணிகளை இழக்கும் நிலை உருவாகி உள்ளது. பொதுத்துறை, அரசு நிறுவனங்களில்தான் இட ஒதுக்கீடு உள்ளது. தமிழக அரசு மற்றும் பொதுத்துறைகளில் உள்ள சி மற்றும் டி பிரிவு பணியிடங்களை அவுட்சோர்சிங், தனியார்மயமாக்கி வருகின்றனர். இதனால் தலித் மக்கள் நிரந்தரப் பணிக்கு செல்ல முடியாது. தனியார்மயம் என்பது இடஒதுக்கீடு என்கிற சமூக நீதியை படுகுழியில் தள்ளும் நடவடிக்கையாகும். உலக வங்கியின் கோரிக்கைகளை ஏற்று கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த தனியார்மய நடவடிக்கை களால் சென்னையில் மட்டும் 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். சென்னை மாநகராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் கொள்கை மாற்றப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார். இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.லெனின் சுந்தர், சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் தலைவர் ஜெ.பட்டாபி, பொதுச்செயலாளர் பி.சீனிவாசலு, பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.