ஒரு நகரத்தை 69 ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் அழித்த எரிமலை மீண்டும் தீ துப்புகிறது. தென்னமெரிக்க நாடான கொலம்பியா மேற்குப் பகுதியில் வாழும் மக்கள் அச்சத்திலும், பீதியிலும் வாழ்கின்றனர். 36 ஆண்டு களுக்கு முன் கால் இலட்சம் மக்களின் மரணத் திற்குக் காரணமான அர்மேரோ என்ற நகரை அழிந்த நகரமாக்கிய நெவாடோ டெல் ரூயிஸ் என்ற எரிமலை முப்பதாண்டு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து தீ கக்கத் தொடங்கியுள்லது. இதில் இருந்து கிளம்பும் புகையும், சாம்பலும் மலைச் சிகரங்களை பொதிந்திருந்த பனிக்கட்டி களை உருகி ஓடச் செய்கிறது. புகழ்பெற்ற “நெருப்பு வளையம்” (Ring of Fires) என்ற எரிமலைத் தொடரில்இந்த எரிமலை யும் ஒன்று. கொலம்பியாவின் தலைநகரமான பகோட்டாவில் இருந்து 169 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த எரிமலை 69 ஆண்டுகளுக்குப் பின் 1985ல் வெடித்துச்சிதறியது. இது 20ம் நூற்றாண்டின் மிக மோசமான எரிமலை வெடிப்பு களில் ஒன்றாக கருதப்படுகிறது. கொலம்பியா வின் வரலாற்றில் இது போன்ற மோசமான ஒரு எரிமலை வெடிப்பு இதுவரை நிகழவில்லை. எரிமலையின் சமீபப் பகுதியில் அர்மேரோ நகரம் அமைந்திருந்தது. நாட்டின் கரி உட்பட உள்ள வேளாண் பொருட்களின் உற்பத்தியில் அர்மேரோ முக்கியப்பங்கு வகித்தது.
அக்காலத் தில் இந்த நகரம் நெரிசல் மிகுந்த, விவசாயிகள் அதிகமான எண்ணிக்கையில் வாழ்ந்த ஒரு தென்னமெரிக்க நகரமாக இருந்தது. 1985 நவம்பர் 13 என்ற நாள் இந்த நகரத்திற்கு எமனாக அமைந்தது. அன்றிரவு எரிமலை வெடித்துச்சிதறி யது. சாம்பலும் லாவாவும் சேர்ந்த கலவை எல் லாத் திசைகளிலும் தெறித்தது. இது பனிப்பாறை களை உருக்கி சேற்றுடன் கலந்தது. ஆறாக ஓடத்தொடங்கியது. முப்பது மீட்டர் வரை அள வுள்ள சேற்றலைகள் உருவாகின. இத்தகைய மூன்று பேரலைகள் அன்றே தோன்றின. ஒருமணிநேரத்திற்கு 3 கிலோமீட்டர் என்ற வேகத்தில் இந்த சேற்றலைகள் அர்மேரோ நகரத்தை இலக்காக்கி முன்னோக்கிப் பாய்ந்தன. நகரவாசிகள் அனைவரும் அந்த இரவில் சுகமான நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். ஓடி வரும் ஆபத்தை அவர்கள் அறியவில்லை. சேற்றி லும், எரிமலைக் குழம்பிலும் அகப்பட்ட நகரத்தின் 70% மக்கள் கொல்லப்பட்டனர். அர்மேரோவில் மட்டும் இந்தப் பேரிடரில் 23,000 பேர் உயிரி ழந்தனர். இப்பேரிடரின் கொடூர அடையாளமாக சேற்றில் சிக்கிக்கொண்ட ஒமாய்ரா சாஞ்சஸ் என்ற சிறுமி மாறினாள். அவள் வீடு தகர்ந்து சேற்றில் புதைந்திருந்தது. கழுத்து, அதற்கு மேல் உள்ள பகுதிகள், கைகள் மட்டுமே அவள் உடலில் சேற்றிற்கு வெளியில் இருந்தது. மனிதர்கள் எங்கெங்கோ சிக்கிக் கொண்டிருந்ததால் அவளை மீட்க ஆளில்லாமல் போனது. மூன்றாவது நாள் அவள் மரணம டைந்தாள். நீர் கோர்த்து வீங்கிய முகம். சிவந்த கண்களு டன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒருவரின் உதவியும் கிடைக்காத அவலநிலையில் மர ணத்தை நேருக்குநேர் எதிர்நோக்கிக் காத்தி ருக்கும் பார்வையுடன் இருந்த அவள் படத்தை மறுநாள் எல்லா ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து அச்சிட்டு வெளியிட்டன. உலக மக்க ளின் மனசாட்சியை இது உலுக்கியது.
அர்மேரோவிற்கு ஏற்பட்ட பேரிடரை தவிர்த்தி ருக்கலாம் என்று பிற்காலத்தில் அங்கு ஆய்வு கள் நடத்திய நிபுணர்கள் கூறினர். இந்தப் பெரும் துயரம் நிகழ்ந்த ஒரு ஆண்டிற்கு முன்பே நெவாடா வெடிப்பதற்கு உரிய அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியிருந்தது. மலையைச் சுற்றிலும் அதிர்வுகள் ஏற்பட்டன. இங்கு மலையேற்றம் நடத்திய சாகச வீரர்கள் எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளிவருகின்றன என்று முன்னறி விப்பு செய்தனர். எரிமலையில் புதியதொரு அக்னி முகம் உருவானது. இதையெல்லாம் கொலம்பிய அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது. அரசின் நிதா னப்போக்கு பேரிடரின் தீவிரத்தை அதிகப்படுத்தி யது என்று கண்டனக் குரல்கள் உலகின் பல மூலைகளில் இருந்தும் எழுந்தன. அந்த கால கட்டத்தில் கொலம்பியாவில் அரசியல், உறு தித்தன்மையற்ற நிலை இருந்தது. இதுவும் இந்த இடர் பேரிடராக மாற ஒரு முக்கியக்கார ணம். எவ்வாறெனினும் அர்மேரோ துயரம் பிற்காலத்தில் எரிமலை வெடிப்புகளால் நிக ழக்கூடிய பேரிடர்கள் பற்றி தீவிர ஆய்வுகளை மேற்கொள்ள வழிவகுத்தது. இன்றும் கொலம்பிய அரசு நெவாடா எரிமலையை கண்காணித்து வருகிறது. அர்மேரோ துயரம் எரிமலைகள் குறித்த புதிய ஆய்வுகளை மேற்கொள்ள உலகின் கண் களைத் திறந்தது.