பொதுவுடைமை இயக்கத்தின் புகழ்மிக்க தமிழ்நாட்டுத் தலைவர்களில் ஒருவர் கட்சித் தோழர்களால் ஐ.மா.பா என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் தோழர் ஐ.மாயாண்டிபாரதி. அவரது நினைவு நாள் பிப்ரவரி 24. அவரது நினைவு நாளையொட்டி கேரள மாநிலம் குமுளியைச் சேர்ந்த தோழர் கே.ஏ.அப்துல் ரசாக், தோழர் ஐ.மா.பா.வின் உருவத்தை அஞ்சல்தலை அளவில் வரைந்து பெருமைப்படுத்தியுள்ளார். தோழர் ரசாக் இந்திய பொதுவுடைமை தலைவர்கள் மற்றும் உலக அரசியல் தலைவர்கள் பலரது உருவப்படங்களையும் இவ்வாறு ஓவியத்தில் வடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தோழர் ஐ.மா.பா. அவர்கள் கேரள மாநிலத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் மனதில் மட்டுமல்ல, அனைவரின் நெஞ்சங்களிலும் நிறைந்திருப்பவர், நிலைத்திருப்பவர்.