tamilnadu

img

எத்தகைய பிரச்சனைகளை, யாருக்காக பேசுகிறோம் என்பதில்தான் ஒரு கட்சி - - ஜி.ராமகிருஷ்ணன் -

எத்தகைய பிரச்சனைகளை, யாருக்காக பேசுகிறோம் என்பதில்தான் ஒரு கட்சியின் பலம் இருக்கிறது. மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிற சட்டங்கள் அல்லது கொள்கைகள் அமல்படுத்தப்பட்டால் அதுகுறித்து இடதுசாரிகளின் கருத்து என்ன என்றுதான் பொதுமக்களும்,  மற்ற அரசியல் கட்சிகளும் கூர்ந்து கவனிக்கின்றனர். எனவேதான் அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக இடதுசாரிகள் இருந்து வருகிறோம்.  ஒருமுறை செய்தியாளர் சந்திப்பில் சீத்தாராம் யெச்சூரியிடம், ‘இடதுசாரிகளுக்கு எதிர்காலம் இல்லையா?’ என்று செய்தியாளர் கேட்ட போது சீத்தாராம் யெச்சூரி தாமதிக்காமல், இடதுசாரிகளுக்கு எதிர்காலம் இல்லை என்றால், இந்தியாவிற்கும் எதிர்காலம் இல்லை என்று பதிலளித்தார்.