tamilnadu

img

தமிழகத்தில் மதவெறி சக்திகளுக்கு இடமில்லை லட்சக்கணக்கானோர் மனிதச் சங்கிலி

சென்னை, அக். 11- லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக் கம் தமிழகத்தில் மதவெறி சக்திகளுக்கு இடமில்லை என்பதைப் பறைசாற்றியது. ஆர்எஸ்எஸ்-பாஜக சூழ்ச்சிகளை முறியடிக்கும் விதமாக லட்சக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் பங்கேற்ற மனிதச் சங்கிலி இயக்கம் செவ்வாயன்று (அக். 11) நடைபெற்றது.அதன் ஒருபகுதியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே தொடங்கி ஆயிரம் விளக்கு மசூதி வரை  நடைபெற்ற மனித சங்கிலியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதி முக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மனிதநேய மக்கள்  கட்சித் தலைவர் எம்.எச்.ஜவா ஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித்  தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

75க்கும் மேற்பட்ட இயக்கங்கள்

மேலும் பல்வேறு அரசியல் கட்சி களும், தொழிற்சங்க இயக்கங்களும், மாணவர், வாலிபர், மாதர் சங்கம், தமு எகச, தையல் தொழிலாளர்கள், கட்டு மான தொழிலாளர்கள், மாற்றுத்திற னாளிகள், சிறுபான்மை மக்கள் நலக்குழு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, மே 17 இயக்கம் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட அமைப்பினர் இந்த மனிதச் சங்கிலி இயக்கத்தில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். மதவெறியை அனுமதியோம்! பேரணியில் பங்கேற்றவர்கள் தமி ழகத்தில் மதவெறியை அனுமதியோம், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாப்போம், மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகளைப் புறக்கணிப்போம் என ஆவேசத்துடன்  முழக்கமிட்டனர். போக்குவரத்து நெரி சல் மிகுந்த அண்ணா சாலையில் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்த விதமான இடையூறுமின்றி அமைதியாக ஒரு மணி நேரம் இந்த மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மாநிலம் முழுவதும் எழுச்சி

அதேபோல் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், திரு நெல்வேலி, கன்னியாகுமரி திருவள் ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளி ட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களி லும், ஒன்றிய அளவிலும் நடைபெற்ற மனிதச் சங்கிலி இயக்கத்தில் அனைத்து  தரப்பு மக்களும் எழுச்சியுடன் பங்கேற்றனர்.

 

;