tamilnadu

img

80 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றம்: முதல்வர் பேச்சு

சென்னை, ஜூன் 17- திமுக ஆட்சிக்கு வந்தபோது ஒருபக்கம் கொரோனா என்ற ஒரு  கொடிய நோய், இன்னொ ருப்பக்கம் நிதிப்பற்றாக் குறை, கஜானா காலியாக இருந்த ஒரு கொடுமை, இதையெல்லாம் சமாளித்து 80 விழுக்காட் டிற்கும் மேல் தேர்தல் நேரத்தில்  தந்த வாக்குறுதிகளை காப்பாற்றியி ருக்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடந்த திமுக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தேர்தல் நேரத்தில் என்னென்ன  வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை மக்களிடத்தில் எடுத்து கூறினோமோ, அவைகள் ஓரளவுக்கு ஏன் 80  விழுக்காட்டிற்கு மேல் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இன்னும் 20 விழுக்காடு தான் இருக்கிறது.  நான் இல்லையென்று கூறவில்லை”என்றார். திமுக ஆட்சிக்கு வந்தபோது, ஒருபக்கம் கொரோனா என்ற ஒரு கொடிய நோய், இன்னொருப்பக்கம் நிதிப்பற்றாக்குறை, கஜானா காலியாக இருந்த ஒரு கொடுமை, இதையெல்லாம் சமாளித்து 80 விழுக்காட்டிற்கும் மேல் தேர்தல் நேரத்தில் தந்த வாக்குறுதிகளை காப் பாற்றியிருக்கிறோம். மிச்சம் இருக்கக்கூடிய அந்த 20 விழுக் காட்டையும், விரைந்து நிறைவேற்று வோம் என்றும் முதலமைச்சர் கூறினார்.