குட்டி ஜப்பான் சிவகாசி என்ற பெருமையுடன் தற்போது மாநகராட்சி என்ற பெருமையும் சேர்ந்துள்ளது மகிழ்ச்சியே! இந்த பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம் விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு தொழிலாகும்.
100 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் வானம் பார்த்த பூமியாக இருந்த சிவகாசியில் இந்நக ரத்தின் முக்கிய பிரமுகர்களான காக்கா சண்முகநாடாரும், அய்யநாடாரும் கல்கத்தா விலிருந்து முதன்முதலில் தீப்பெட்டியை கொண்டுவந்து உற்பத்தி செய்தனர். அது காலப்போக்கில் கலர் மத்தாப்பாக- கம்பி யாக, பொட்டு வெடி, சோர்சா வெடி, குருவி வெடி, ராக்கெட், அணுகுண்டுவெடி என வளர்ச்சி பெற்றது. விவசாயம் பொய்த்துப் போன நிலையில் சிவகாசியை சுற்றியுள்ள கிரா மங்களில் விவசாய குடோன்களாக, மாட்டு தொழுவமாக இருந்த கட்டிடங்கள் தீப்பெட்டி ஆலைகளாக உருமாறின. இதனால் கிரா மப்புற, நகர்ப்புற தொழிலாளர்கள் சில ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்து வந்த தீப்பெட்டி தொழில், மேலும் வளர்ச்சி பெற்று சில குறிப்பிட்டவை பட்டாசு ஆலையாக வளர்ச்சி பெற்றன.
1990க்கு பிறகு சிவகாசி பட்டாசு உற்பத்தி யாளர்கள் - பட்டாசு உற்பத்தியில் உலகின் நம்பர் ஒன் தேசமாக உள்ள சீனாவுடன் தொடர்பை ஏற்படுத்தி அங்குள்ள தொழில்நுட்பத்துடன் சிவகாசியில் பேன்சிரக பட்டாசுகள் உற்பத்தி செய்ய முடிவு செய்து வர்ணஜாலம் நிகழ்த் தும் பேன்சிரக பட்டாசுகள் உற்பத்தி செய்த னர். இது தற்போது மேலும் வளர்ச்சி பெற்று 8 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலையை யும், உற்பத்தி மூலம் ரூ.6,000 கோடி மொத்த வணிகமும், இந்தியா முழுவதும் சில்லரை விற்பனை மூலம் ரூ.15,000 கோடிக்கு வர்த்தக மும் நடக்கும் தொழிலாக பட்டாசு தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது. இது முழுக்க முழுக்க தொழிலாளர்களின் உழைப்பாலும், ரத்தம் சிந்தி உயிர்கொடுத்தும் செய்த மகத்தான தொழில் முன்னேற்றம்.
பட்டாசின் தற்போதைய நிலை
இந்திய தேவையில் 95 சதவீதம் பட்டாசு உற்பத்தி சிவகாசியை சுற்றி உள்ள 1070 பட்டாசு ஆலைகளில் நடைபெற்று வருகிறது. உலகின் பலநாடுகளுக்கு பட்டாசு தேவையை சீனா ஏற்றுமதி செய்து பலஆயிரம் கோடி ரூபாய் அன்னியச் செலாவணி ஈட்டி வருகின்றனர். சீன நாடு அளவுக்கு நமது சிவகாசி பட்டாசுகள் ஏற்றுமதி செய்ய வாய்ப்பிருந்தும் நமது ஒன் றிய அரசுகள் அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக இந்த தொழிலையே முற்றாக அழிப்பதற்கு இன்றைய பாஜக அரசு திட்மிட்டு சீர்குலைத்து வருகிறது. இதற்கு எதி ராக கடந்த 2017 முதல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இந்திய தொழிற்சங்க மைய மும் தொடர்ச்சியாக தொழிலாளர்களை திரட்டி போராடி வருகிறது. தொழிலாளர்களின் வலு வான போராட்டம் மூலமே தற்போது வரை பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்ற வழக்கும் - தற்போதைய நிலைமையும்
2015 ல் தற்போதைய ஒன்றிய பாஜக அர சின் அட்வகேட் ஜெனரல் கே.கே.வேணு கோபால் அவர்களின் அலுவலகத்தில் ஜூனிய ராக இருக்கும் அர்ஜீன்கோபால் என்ற வழக்க றிஞர் பட்டாசு வெடிப்பதால் தில்லியில் கடுமை யான காற்று மாசுபடுகிறது; எனவே தில்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பட்டாசு வெடிக்க தடைகேட்டு உச்சநீதிமன்றத்தில் 2015 ல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 2016ல் தில்லியில் பட்டாசு வெடிக்க தீபாவளிக்கு முன்பு ஒரு வாரமும், தீபாவளியுடன் ஒரு வாரமும் தடை விதித்தது. இது ஒட்டுமொத்த பட்டாசு விற்பனையில் 25 சதவீதம் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி யது. இதனைத் தொடர்ந்து 2018 ல் கொல்கத்தா வை சேர்ந்த நபர், தில்லி மட்டும் அல்லாது நாடுமுழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடைவிதிக்க வேண் டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து உச்சநீதி மன்றம், 2018 அக்டோபர் மாதம் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தனது இடைக்கால உத்தரவில் காற்று மாசு ஏற்பட காரணமாக இருப்பதாகச்சொல்லி சரவெடி உற்பத்திக்கு தடை, பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட்டுக்கு தடை, இது அல்லாத பசுமை பட்டாசு மட் டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என உத்த ரவிட்டது. இதனால் 2018 நவம்பர் முதல் பிப்ரவரி வரை பட்டாசு ஆலைகள் முழுமை யாக மூடப்பட்டன.
எழுச்சிகரமான தொழிலாளர் போராட்டம்
பட்டாசு ஆலைகளை திறக்கவும், உடனே தொழிலாளர்களுக்கு வேலை வழங்க கோரி யும், 2018 டிசம்பரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 3 நாள் நடைபயணம் நடை பெற்றது. மேலும் இந்த வழக்கின் தீர்ப்பில் இன்றைய ஒன்றிய மோடி அரசின் சதியை தொழிலாளர்கள் மத்தியிலும், உற்பத்தியா ளர்கள், வணிகர்கள், வியாபாரிகள், டிரான்ஸ்போர்ட்டர் உட்பட அனைத்து தரப்பினரிடமும் கொண்டு செல்லப்பட்டது. இதில் தொடர்ச்சியாக 2018 டிசம்பர் 18 ல் சிஐ டியு பட்டாசு - தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கருப்புகொடி ஆர்ப்பாட்டம், டிசம்பர் 21ல் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, இதைத் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட சிஐடியு மாநிலத்தலைவர் அ. சவுந்தரராசன், சிபிஐ மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாவட்ட தலைவர்களின் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அன்றைய அதிமுக அரசும் உச்சநீதிமன்ற வழக்கில் வழக்கறிஞரை வைத்தும், மத்திய அரசை நிர்பந்தித்தும், தொழிலை பாதுகாப்பதாக உறுதியளித்தனர். அதன் பிறகும் ஆலைகள் திறக்கப்படாத நிலையில் உச்சநீதிமன்ற வழக்கில் சிஐடியு பட்டாசு சங்கமும், சங்கத் தலைவர் மகா லட்சுமி பெயரில் வழக்கில் இணைந்து வாதாடி வருகிறோம். தொழிலாளர்களை திரட்டி உண்ணாவிரதம், கஞ்சிதொட்டி போராட் டம், மனிதசங்கிலி என எழுச்சியுடன் நடத்தப் பட்டதால் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டு ஆலைகள் மீண்டும் வேலையை துவங்கின.
நித்திய கண்டம் பூர்ண ஆயுசு
தற்போது 2018 உச்சநீதிமன்ற உத்தரவை 2021 லிருந்து கடுமையாக அமுலாக்க வேண்டும். இடைக்கால உத்தரவு அடிப்படை யில் மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என மீண்டும் உச்சநீதிமன்றம் வலி யுறுத்தியுள்ளது. இதனால் பட்டாசு ஆலை கள் நவம்பர் 2021 முதல் மூடப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து 8 லட்சும் தொழிலாளர் களின் வேலையும், வாழ்க்கையும் பாதிக்கப் பட்டுள்ளது. எனவே இதை எதிர்த்து சிஐடியு பட்டாசு தொழிலாளர் சங்கம் மீண்டும் 26.11.2021 முதல் தொழிலாளர்களை திரட்டி போராட்டத்தை துவக்கி உள்ளது.
தொழிலாளர்கள் போராட்டம் வென்று காட்டும் நிச்சயம்
தில்லியில் விவசாயிகளும், தொழிலா ளர்களும் இணைந்து கடந்த ஓராண்டாக நடத்திய வீரம் செறிந்த போராட்டம் 3 வேளாண் சட்டங்களை உடைத்தெறிந்தது. அதுபோல பாஜக ஒன்றிய அரசும் - உச்சநீதிமன்றமும், ஒட்டுமொத்த பட்டாசு தொழிலையும் கார்ப்ப ரேட்களிடம் ஒப்பபடைப்பதற்கான திட்டத்து டன் காற்றுமாசு என்ற சொத்தையான கார ணத்தை சொல்லி பட்டாசு தொழிலை - 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையை பறிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்ச்சி திட்டத்தை முறியடிக்க ஒன்றுபட்ட தொழிலாளர்கள் - உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து போராட் டக் களத்தை சந்திக்க வேண்டியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாவட்ட மாநாடு பட்டாசு தொழிலை யும் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை யும் பாதுகாக்க உறுதி ஏற்க உள்ளது. மாநாட்டில் விவாதிப்போம், போராடுவோம் வெற்றி பெறுவோம்.