tamilnadu

img

கருணாநிதி நூற்றாண்டு விழா 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்

சென்னை, ஜூன் 7- மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கிண்டியிலுள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரக்கன்று நட்டு புதன்கிழமை (ஜூன் 7) தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்புக்கு இணங்க, 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலை துறையின் 340 சாலை களில் நடப்படவுள்ள மகிழம், வேம்பு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை போன்ற வகையைச் சார்ந்த சுமார் 46,410 மரக்கன்றுகள், 24 மாத காலம் வளர்ச்சிக் கொண்டவையாகும். மேலும், பருவமழைக்கு முன்பாகவே 5 லட்சம் மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார் உள்ளிட்ட பலர்   கொண்டனர்.