374 தொழில் நிறுவனங்கள்; ரூ.1.53 லட்சம் கோடி முதலீடு
கேரள மாநிலம் கொச்சி போல் கட்டியில் ‘இன்வெஸ்ட் கேரளா குளோ பல் உச்சி மாநாடு - 2025’ நடந்தது. பிப்ரவரி 21, 22 தேதிகளில் லூலூ சர்வதேச மாநாட்டு மையத்தில், கேரள அரசின் தொழில் மற்றும் வணிகத்துறையின் கீழ் கேரள மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (KSIDC) ஏற்பாடு செய்திருந்த இம்மாநாட்டை முதல்வர் பினராயி விஜயன் துவக்கிவைத்தார்.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் கேரளம்
கேரளத்தின் பொருளாதார நிலப் பரப்பை உயர்த்தும் முயற்சியில், பல்வேறு துறைகள் மற்றும் தொழில் களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கான கேரள அரசின் முயற்சியாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கேற்ப, இந்த உலகளா விய இரண்டு நாள் வணிக முதலீட்டா ளர் உச்சி மாநாடு, கேரள முன் னேற்றத்தில் ஒரு மைல்கல்லாக வும், தொழில்துறை வளர்ச்சி வர லாற்றில் ஒரு முன்மாதிரியாகவும் அமைந்தது. இது இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் புதிய நட வடிக்கைகளின் உறுதியான சாதனை யாகும்.
முதலீட்டிற்கான மாநிலமாகும் கேரளம்
இந்த உச்சி மாநாடு, கேரளத்தை முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக மாற்றுவதற்கான ஒன்றுபட்ட பய ணத்தின் ஒரு துவக்கத்தைக் குறிப்ப தாக அமைந்ததுடன், அரசாங்கம் மட்டுமன்றி, எதிர்க்கட்சிகள், முத லீட்டாளர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் கேரளத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து நிற்கிறார்கள் என்பதையும் உலகிற்கு அறிவித்தது.
ரூ. 1.53 லட்சம் கோடி முதலீட்டிற்கு கையெழுத்து
வளர்ச்சிக் கனவுகளுக்கு புதிய சிறகுகளை வழங்கும் வகை யில், மொத்தம் ரூ. 1 லட்சத்து 53 ஆயிரம் கோடி மதிப்புள்ள முத லீடுகளுக்கான ஒப்பந்தங்கள் உச்சி மாநாட்டில் கையெழுத்திடப்பட்டன. 374 நிறுவனங்கள் தங்களின் முத லீட்டு விருப்பத்தைத் தெரிவித்தன. இவற்றில், அதானி குழுமம் ரூ. 30 ஆயிரம் கோடி, ஹைலைட் குழுமம் ரூ. 10 ஆயிரம் கோடி, லூலூ குழுமம் ரூ. 5,000 கோடி, ஷரஃப் குழுமம் ரூ. 5,000 கோடி, என்ஆர்ஜி கார்ப்பரேஷன்ஸ் ரூ. 3,600 கோடி, செர்ரி ஹோல்டிங்ஸ் ரூ. 4,000 கோடி, மலபார் குழுமம் ரூ. 3,000 கோடி, ரவி பிள்ளை குழுமம் ரூ. 2,000 கோடி என அளவில் முதலீடு களை மேற்கொள்ள உள்ளன. '
60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்
24 ஐடி நிறுவனங்கள் கேரளத்தில் தங்களின் தொழில்களை விரிவு படுத்த உள்ளன. இதன் மூலம் ரூ.8 ஆயிரத்து 500 கோடி முதலீடு வரவுள்ளது. 60 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். நிறுவனங்களில் உறுதிப் படுத்தல் கடிதங்களை மேலும் செயலாக்குவதற்கு ஒரு விரை வான அமைப்பு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவ் அறிவித்துள் ளார்.
இஎம்எஸ் அரசின் வழியில் பினராயி விஜயன் அரசு
முதலீடுகளை சாத்தியமாக்கு வதற்கு திறமையான அமைப்புகள் நடைமுறையில் இருக்கும். அன்றாட விவகாரங்களுக்கு அப்பால், ஒவ்வொரு துறையிலும் நீண்டகாலக் கொள்கை முயற்சிகளை பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் முன்வைத்துள்ளது.
அவை நாட்டு நலன், மக்களின் உயிர்வாழ்வு மற்றும் எதிர்காலத்தை அடிப்படை யாகக் கொண்ட நிலைப்பாடுகள் ஆகும். 1957-ஆம் ஆண்டு இ.எம். எஸ். அரசாங்கம் ஆட்சிக்கு வந்த திலிருந்து இடதுசாரி அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்ட அணுகுமுறையின் தொடர்ச்சியாகவே தற்போது பினராயி விஜயன் அரசு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளது.
வெற்றிகரமாக ‘கிப்பி’யை உருவாக்கிய கேரள அரசு
தொழிற்துறையில் பெரிய அளவிலான முதலீட்டை ஈர்க்க, உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். முதலீட்டுக்கு உகந்த சூழ லை வளர்க்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் தான் தேசிய நெடுஞ்சாலைகள், சாலைகள், பாலங்கள் மற்றும் துறைமுகங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதி யாக உட்கட்டமைப்பு மேம்பாட்டி ற்குத் தேவையான நிதியை கண்டு பிடிப்பதற்கான வழக்கமான வழிகள் அல்லாத நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. அதற்கு கிப்பி (KIFB- கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி கழகம்) ஒரு உதாரணமாகும். முன்மாதிரியான கேரளத்தின் நீர் மெட்ரோ உச்சிமாநாட்டிற்காக கொச்சிக்கு வருகை தந்தபோது, முதலீட்டாளர்கள் கொச்சி நீர் மெட்ரோ சேவையைப் பாராட்டினர். அதன் குறிப்பைப் பெற்று, நாட்டின் பல்வேறு மாநிலங்களின் 18 நகரங்களில் நீர் மெட்ரோக்களை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கான ஆய்வுகளைத் தொடங்குவதற்கான ஒப்பந்தங்களில் கேஎம்ஆர்எல் கையெழுத்திட்டதாகவும் கேரள தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவ் தெரிவித்தார். “முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்,” என்று மேலும் கூறினார். ஒன்றிய அமைச்சர் குரியன் பாராட்டு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகாரத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் பங்கேற்றார். ஒன்றிய அரசின் சார்பில், கேரளத்தில் “ஒருங்கிணைந்த நீர் பூங்கா” அமைப்பதாகவும் அவர் அறிவித்தார். அண்மையில், தில்லியில் ஒன்றிய அமைச்சர்களைச் சந்தித்து மாநிலத்தின் முக்கிய திட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்ட வைத்ததாக கேரள தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவை அவர் குறிப்பிட்டார். “எங்கள் தொழில்துறை அமைச்சர் மிகவும் கடின உழைப்பாளி,” என்றும் ஒன்றிய அமைச்சர் புகழ்ந்தார். கேரளம் மீது கவனத்தை குவித்த உலக நாடுகள் பல்வேறு களங்களில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களைத் தவிர, வியட்நாம், மலேசியா, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளும் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் இணைந்து கொண்டன. கேரளத்தின் ஆற்றல்களை இந்தியாவும் உலகமும் அங்கீகரிக்கின்றன. டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்ற உச்சி மாநாடு உட்பட, அனைவரும் கேரளாவின் மீது கவனம் செலுத்தினர். இந்தப் பின்னணியில்தான் கொச்சியில் நடந்த உலக முதலீட்டாளர் கூட்டத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த வெற்றிக் கதையின் மூலம், கேரளம் ஒரு புதிய வளர்ச்சி மாதிரியை உருவாக்குகிறது. கேரள தொழிற்துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. - தொகுப்பு சி. முருகேசன்