நாக்பூர்,
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் சூழலில் ஆர்எஸ்எஸ் -ன்முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பிலிருந்து 5000 பேர் வெளியேறி காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ்-ன் முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பில் கடும் பாகுபாடு உள்ளதாக 5,000 பேர் சனிக்கிழமை காங்கிரசில் சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பின் நாக்பூர் நகரத் தலைவர் ரியாஸ் கான், “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கட்சியினர் முஸ்லீம்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எனவே 5,000 நபர்களை அழைத்துக்கொண்டு வந்தது காங்கிரஸில் இணைவதாக” கூறினார்.
நாக்பூர் காங்கிரஸ் மக்களவைத் தொகுதி வேட்பாளர் நானா படோல் அவர்களைப் பெருந்தன்மையுடன் தங்களது கட்சிக்கு வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.