tamilnadu

img

சதுரங்க போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

தருமபுரி, அக்.10- சேலம் பெரியார் பல் கலைக்கழக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு வழங்கும் விழா வியாழனன்று தரும புரி அரசு கல்லூரியில் நடை பெற்றது. தருமபுரி அரசு கலைக் கல்லூரி அண்ணா நூற்றாண்டு விழா கலையரங்கத்தில் சதுரங்க போட்டி நடை பெற்றது. உடற்கல்வி இயக்குநர் முனைவர் கு.பாலகிருஷ்ணன் வரவேற்றார். முதல்வர் (பொறுப்பு) ஜா.பாக்கியமணி தலைமை வகித்தனர். போட்டியை வேலூர் நீதிபதி ஆனந்தன், தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் மு. சகுந்தலா ஆகியோர் துவக்கி வைத்தனர். கூட்டுறவுத்துறை இணை பேராசிரியர் பெ.ராஜேந்திரன், தாவரவியல்துறை இணை பேராசிரியர் முனைவர் விஜயா தாமோதரன், தமிழ்த்துறை இணை பேரா சிரியர் இரா.சங்கர், பெரியார் பல்கலைக் கழக உடற்கல்வி இயக்குநர் முனைவர் க. வெங்கடாசலம்,ஏவிஎஸ் உடற்கல்வி இயக் குனர் முனைவர் ஆர்.சுரேஷ்குமார்  ஆகி யோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக, சதுரங்கபோட்டியின் தலைமை நடுவராக ராஜசேகரன் செயல் பட்டார்.  சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்,  பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப் பட்டது. சேலம் சாரதா மகளிர் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் டி.ஆர்.இந்திரா நன்றி கூறினார்.