tamilnadu

img

அண்ணல் மகாத்மா காந்தி  அவர்களின் நினைவு புகைப்படங்களை பிர்லா மாளிகையில் இருந்து அகற்ற மோடி அரசு முயற்சி....


தேச ஒற்றுமைக்காகவும் மத பிரிவினைக்கு எதிராகவும் போராடி இந்துத்துவ மத வெறியன் நாதுராம் விநாயக் கோட்சே வின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு தனது உயிரை பறிகொடுத்தவர் அண்ணல் மகாத்மா. ஜனவரி 30. 1948 அது ஒரு கருப்பு வெள்ளிக்கிழமை .மாலை 5.17 மணிக்கு பிரார்த்தனை கூட்டத்திற்காக வருகை தந்த அண்ணலை, தனது கையில் வைத்திருந்த "பெரட்டா" வகை துப்பாக்கியின் விசையை அழுத்தி  3 குண்டுகளை அண்ணலின் மார்பில் துளைக்கச் செய்து உயிரை பறித்த மாபாதகச் செயலை மேற்கொண்டான் கோட்சே.  இந்திய விடுதலை போராட்டத்தில் மிக முக்கிய பங்களிப்பை செய்த மகாத்வின் உயிரை அன்று பறித்ததோடு ஓயாமல் இன்றும் தொடர்கிறது  மதவெறி. கொலையாளிக்கு சிலை வைத்து கொண்டாடுகிறது ஒரு கூட்டம். இதோ அடுத்ததாக அண்ணலை அவமானப்படுத்த இன்னுமோர் முயற்சி. பிர்லா மாளிகையில் உள்ள மகாத்மாவின் புகைப்படங்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. உயிர்ப்போடு இருக்கும் புகைப்படங்களை டிஜிட்டல் மயப்படுத்துகிறோம் என்ற பெயரால் கழட்டி தூற எறிந்திருக்கிறார்கள்.

பிரெஞ்ச் புகைப்பட கலைஞர் ஹென்றி கார்டியன் பிரெஸ்ஸன் என்பவர் "தி பிரிண்ட் " இதழ் மூலம் இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். மதவெறியிடமிருந்து அண்ணல் மகாத்மாவை  பாதுகாக்க முடியவில்லை. ஆனால் அண்ணல் விரும்பிய மதவெறி மோதல்களற்ற, மதச்சார்பின்மை மாண்பை உயர்த்திப்பிடிக்கும் இந்திய தேசத்தை உறுதியோடு பாதுகாப்போம்.
-ஆர்.பத்ரி

;