tamilnadu

img

தனிநபர் சுதந்திரத்தை பாதுகாப்பது நீதிமன்றத்தின் கடமை ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து 7 நாளில் பரிசீலனை செய்திடுக!

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி,ஜன.10-  தனிநபர் சுதந்திரத்தை பாதுகாப்பது நீதிமன்றத்தின் கடமை என்றும் ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து மத்திய அரசு  7 நாளில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பாஜக அரசு, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து,அந்த மாநி லத்தை இரண்டாக பிரித்து சிதைத்தது. அதைத்தொடர்ந்து, காஷ்மீரில் மக்கள்  நடமாட்டத்துக்கும் தகவல் தொடர்பு சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  செல்போன் மற்றும் தரைவழி தொலைபேசி இணைப்பு களும் முடக்கப்பட்டன. முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர்  அப்துல்லா, மெகபூபா முப்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் யூசுப் தாரிகாமி  உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலை வர்கள் வீட்டுக்காவலில்  வைக்கப் பட்டனர். பிற மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஜம்மு- காஷ்மீர் செல்வதற்கு கட்டுப்பா டுகள் விதிக்கப்பட்டன. மத்திய பாஜக அரசின் இத்தகைய அராஜக நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது.

ஜம்மு-மாநிலத்தில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், டைம்ஸ் பத்திரிகை  ஆசிரியர் அனுராதா பாசின் உள்ளிட் டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்தது.  இந்நிலையில் ஜனவரி 10 வெள்ளி யன்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறி யிருப்பதாவது:  இணையம் என்பது கருத்துரிமையின் ஒரு பகுதி. தனிநபர் சுதந்திரத்தையும், தனிநபர் பாது காப்பையும் காக்க வேண்டியது நீதி மன்றத்தின் கடமை.  ஜம்மு- காஷ்மீரில் தனி நபர் சுதந்திரம் மற்றும் பாது காப்பை சமமாக பார்க்க வேண்டி யுள்ளது. இணையதளத்தில் கருத்து தெரி விக்கும் சுதந்திரம் என்பது ஒரு மனி தனின் அடிப்படை உரிமையாகும். இணையதளம் உள்ளிட்டவற்றுக்கு தடைவிதிக்கும்போது, அதனை மக்களுக்கு மத்திய அரசு முறையாக தெரிவிக்க வேண்டும்.  ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த அரசு உத்தரவுகளை  இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தர விட்டனர். மேலும், ஜம்மு காஷ்மீரில் அம லில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கு வது பற்றி ஒரு வாரத்தில் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

;