tamilnadu

img

தில்லி திகார் சிறையில் சுமார் 7000 கைதிகளுக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை

சிறையில் கைதிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதை குறைக்க தில்லி திகார் சிறையில் சுமார் 7000 கைதிகளுக்கு மனநல மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.


தில்லி சிறை நிர்வாகத்தின் கீழ் நடத்தப்பட்ட பிராஜக்ட் சமர்தன் என்ற நடவடிக்கையில் திகார் சிறையில் உள்ள சுமார் 16 ஆயிரம் கைதிகளை மனநல மருத்துவர்கள் பரிசோதனை செய்ததாக திகார் சிறையின் தலைவர் அஜய் கஸ்யாப் தெரிவித்துள்ளார். மேலும், பரிசோதனைக்காக திகார் சிறையின் 16 வளாகத்தில் கைதிகள் பிரிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை நடந்தது. அதில் சுமார் 7000 கைதிகளுக்கு ஆலோசனை சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையின் பார்வையில் Mental Health Foundation என்ற அரசு சார நிறுவனமும் தில்லி சிறை நிர்வாகத்துடன் இணைந்து சிறைகளில் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.