புதுதில்லி,நவ.16- சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 51 ஆயிரமாக அதிகரித்துள் ளது. 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிகமாக உயிரிழந்துள்ளனர். 64 சதவீத விபத்துகளுக்கு காரணம் தவறான திசையில் வாகனத்தை செலுத்துவதுதான் என்று புள்ளி விவரங்கள் தெரி விக்கின்றன.