ஜனவரி 1 புதனன்று, மக்கள் வீதி நாடகக் கலைஞரும் மகத்தான சமூகப் போராளியுமான தியாகி சப்தர் ஹஸ்மி நினைவு நாளையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் ஜந்தாப்பூர் சஹிபாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், பிரபல திரைப்படக் கலைஞரும், சமூகப் போராளியுமான ஷப்னா ஹாஸ்மி, பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.