tamilnadu

img

சத்தீஸ்கரில் 15 ஆயிரம் கோழிகள் அழிப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக 15 கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கொரியா மாவட்டம் கிபகுந்த் பூரில் உள்ள அரசு கோழிப்பண்ணையில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. எச்5என்1 வைரஸ் பாதிப்புக்குள்ளான கோழிகளும், கால்நடைகளும் கடந்த டிசம்பர் 7-ந் தேதி உயிரிழந்தன. அவை சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கின நோய் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் பறவை காய்ச்சல் நோய் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டது. 
இதைத்தொடர்ந்து பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சையில் பலன் இல்லாமல் போகவே கொரியா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட 10 கி.மீ சுற்றுவட்டார பகுதியில் கோழிகள் மற்றும் காடைகள் அழிக்கப்பட்டன. இதுவரை 15 426 கோழிகளும், 30000 முட்டைகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த வைரசால் அப்பகுதி மக்கள் யாரும் பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

;