வியாழன், செப்டம்பர் 23, 2021

tamilnadu

img

அமெரிக்காவில் சேமித்து வைக்கப்படும் கச்சா எண்ணெய்....

புதுதில்லி:
பெட்ரோலிய வளம் சார்ந்தசெயல் திட்டங்களை மேற் கொள்வது தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந் திர பிரதான் கூறியுள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையிலான எரிசக்திக் கூட்டுறவு திட்டம் குறித்த வீடியோ கான்பரன் சிங் இரண்டு நாட்களுக்கு முன்புநடைபெற்றது. இதில், மத்தியபெட்ரோலியத் துறை அமைச்சர்தர்மேந்திர பிரதான், அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் டான்ப்ரூலெட் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்குப் பின்செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோலிய வளம் தொடர்பான திட்டங்களை சேர்ந்து மேற்கொள்ளலாம் என்று அமெரிக்கா அழைப்புவிடுத்ததாகவும், இதனையடுத்துஇருநாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.அதாவது, “கச்சா எண் ணெய்யை அமெரிக்காவில் தேக்கி வைப்பது தொடர்பாகபேச்சுவார்த்தை நடைபெறுகிறது; இதன் மூலம் இந்தியாவின் கச்சா எண்ணெய்க் கையிருப்பை அதிகரிக்க முடியும்”என்று கூறியுள்ளார்.அமெரிக்க எரிசக்தி அமைச் சர் டாம் ப்ரூலெட், “இத்திட்டம் பரஸ்பரம் இருநாடுகளுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

;