புதுதில்லி,டிச.29- தில்லியில் சிஆர்பிஎப் படைப்பிரிவு தலைமையக த்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். லோதி ரோடு சாலையில் சிபிஐ தலைமையகம் அருகே 2.23 ஏக்கர் நிலத்தில் சிஆர்பிஎப் படைப்பிரிவு தலை மையக கட்டிடம் 277 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் ஆண்டுக்கு 100 நாள் கள், அவர்களின் குடும்பத்தின ருடன் தங்கி இருப்பது உறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.