tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டம் - போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்

கோவை, ஜன. 13 –  குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியு றுத்தியும், தேசிய குடிமக்கள் பதி வேட்டினை கைவிட கோரியும் கோவையில் தொடர் போராட் டங்கள் நடைபெற்று வருகிறன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த  சட்டத்திற்கு நாடு முழுவதும்  எதிர்ப்பு வலுத்துவருகிறது. சர்வதேச அளவில்மனித உரிமை  செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வ லர்கள் இந்தசட்டத்திருத்தத்திற்கு  கண்டனங்களை தெரிவித்துள்ள னர். ஆனால் மத்திய அரசு இந்த எதிர்ப்புகளை பொருட்ப டுத்தாமல் கடந்த 10-ம் தேதி  குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாக அரசிதழில் வெளியிட்டது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை மேலும் மக் களை போராட்டத்திற்கு தள்ளி யுள்ளது. இதன் ஒரு பகுதியாக திங்களன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித  நேய மக்கள் கட்சி சார்பில் குடியுரி மையைக் காக்க ஒரு லட்சம் பேரி டம் கையெப்பம் பெற்று பெண் கள், குழந்தைகள் என இரண்டாயி ரம் பேர் பேரணியாக வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர்.

இதுகுறித்து அப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூறுகை யில், கேரளா உள்ளிட்ட சில மாநி லங்கள், மத்திய அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தை அமல்ப டுத்த மாட்டோம் என்று சொல்லி  வருகின்ற சூழலில் இந்த சட்டத்தி ருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் வாக்களித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது எனவும் தமிழக அரசு உடனடியாக அமைச்சர வையை கூட்டி இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று  முடிவு எடுக்க வேண்டும். இவ் வாறு அவர்கள் தெரிவித்தனர். இதேபோல் ஞாயிறன்று கோவை கோட்டைமேடு ஹிதா யத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத், தரீக்கத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் மற்றும் கேரள முஸ்லீம் ஜமாத் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது.கோட்டைமேட்டி லிருந்து பேரணியாகவந்த இஸ் லாமிய பொதுமக்கள் டவுன் ஹால் பொதுப்பணித்துறை  அலுவலகத்திலிருந்து உக்க டம் சாலை வரை மனித சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட் டனர். போராட்டத்தின் போது  இந்திய குடிமக்கள் மீது ஆர்எஸ் எஸ் அமைப்பின் கொள்கைகளை திணிக்கும் மத்திய அரசை கண்டித் தும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்ப  பெற வலியுறுத்தியும் முழக்கங் களை எழுப்பினர்.

;