செவ்வாய், மார்ச் 2, 2021

tamilnadu

img

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு அனுமதி மறுப்பு

குடியரசுத் தலைவர் பங்கேற்ற புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் புதுச்சேரி வந்தடைந்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று சில மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் 205 ஆராய்ச்சி மாணவர்களுக்கு (131 ஆண் மற்றும் 74 பெண்), பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பிஎச்.டி/முதுகலை/இளங்கலை பட்டம் 117 தங்கப் பதக்கங்கள் (35 ஆண் மற்றும் 82 பெண்) வழங்கப்பட்டது.மொத்தமாக தற்போது 322 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மொத்தம் 19,289 மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் பட்டங்கள் வழங்கப்பட்டது. அதில் 15,020 முழுநேர கல்வி மாணவர்கள் மற்றும் 4,269 தொலைதூர கல்வி மாணவர்கள் தங்கள் பட்டங்களைப் பெற்றனர்.

இதற்கு முன்னதாக விழாவில் கலந்து கொள்ள வந்த, கேரள மாணவி ரபிஹாவை அவரது தலையில் அணிந்து வந்த ஹீஜாப்பை அகற்றும்படி பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கு மாணவி  மறுப்பு தெரிவித்ததால் அவர் வெளியேற்றப்பட்டார். இவர் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்றவர். குடியரசு தலைவர் புறப்பட்டு சென்ற பின்னரே அந்த மாணவி உள்ளே அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அம்மாணவிக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்ட நிலையில், அவர் பதக்கத்தை வாங்க மறுத்துள்ளார். இந்தச் சம்பவம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

;