tamilnadu

img

புதுச்சேரி மற்றும் விழுப்புரம் வேட்பாளர் பிரச்சாரம்

புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு கை சின்னத்தில் வாக்குகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி நகரச் செயலாளர் மதிவாணன் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம்,தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், செயற்குழு உறுப்பினர் சீனுவாசன், பிரதேசக்குழு உறுப்பினர் சரவணன், நகரக்குழு உறுப்பினர்கள் மணவாளன், ஜோதிபாசு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


விழுப்புரம்.ஏப்.13-விழுப்புரம்(தனி) மக்களவை தொகுதியில் போட்டியிடும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தை கட்சி பொதுச் செயலாளர் து.ரவிக்குமாரை ஆதரித்து விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாவல் மருதூர், கண்டமங்கலம் உட்பட பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஏ.சங்கரன், ஒன்றியச் செயலாளர் குப்புசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் சௌந்தரராஜன், பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;