புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஜன.28) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அடுத்த மாதம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்தத் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவது குறித்தும் மக்கள் நல பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமைச் செயலர் அஸ்வனி குமார் மற்றும் செயலர்கள் கலந்து கொண்டனர்.