tamilnadu

பி.சுகந்தி....1 ஆம் பக்கத் தொடர்ச்சி..

1 ஆம் பக்கத் தொடர்ச்சி... 

நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை நூறுநாள் வேலைத்திட்டத்தில் சேர்த்து வேலை வழங்க வேண்டும். நகர்புறப் பகுதிகளுக்கும் நூறுநாள்வேலையை விரிவுபடுத்த வேண்டும்.ஊரடங்கு காலத்தில் 80 சதவிகிதம் குடும்ப வன்முறைகள் அதி
கரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவிக்கிறது. இதற்குவேலையின்றி வீட்டில் முடங்கிக்கிடந்தது, வறுமை, பசி, பட்டினி உள்ளிட்டவைகளே காரணம். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மட்டும் பாதிக்கப்படப்போதில்லை; நுகர்வோரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார் கள். இந்தச் சட்டங்கள் ரேசன் முறையையும் அழிப்பதற்கு வழிவகுக்கிறது.கடந்த 15 நாளில் சிலிண்டர் விலை ரூ.100 அதிகரித்துள்ளது. மோடிஅரசு ஆட்சிக்கு வந்தபோது 414 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை தற்பொழுது குடும்பத்திற்கு 710 ரூபாயாகவும் மற்றவர்களுக்கு 810 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை நூறு ரூபாயை எட்டவுள்ளது.இப்படி செங்குத்தான விலை உயர்வுக்கு காரணமான ஆட்சியாளர் களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

;