புதுக்கோட்டை, ஜூலை 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியக்குழு சார்பில் ஒருநாள் அரசியல் வகுப்பு சனிக்கிழமை அரிமளத்தில் நடைபெற்றது. பேரவைக்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.அடைக்கப்பன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்வி.ராமையா முன்னிலை வகித்தார். ‘மார்க்சியம் வெல்லும்’ என்ற தலைப்பில் தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா.முத்துநிலவன், ‘கட்சித் திட்டம்’ என்ற தலைப்பில் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் பெரி.குமாரவேல் ஆகியோர் உரை யாற்றினர். முன்னதாக ஒன்றியச் செயலாளர் ஜி.நாக ராஜன் வரவேற்க, ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.மணி நன்றி கூறினார். பேரவையில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி உறுப்பி னர்கள் பங்கேற்றனர்.