tamilnadu

img

கிராம சபை கூட்டத்தில் இலவச தலைகவசங்கள் வழங்கல்

பொன்னமராவதி, ஜன.28- புதுக்கோட்டை பொன்ன மராவதி ஊராட்சி ஒன்றி யம் தொட்டியம் பட்டி ஊராட்சியில் குடியரசு தினத் தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் பல்வேறு கேள்விகளை அதி காரிகளை நோக்கி எழுப்பி னர். குறிப்பாக சமூக தணிக்கை அறிக்கை முறை யாக வைக்கப்படவில்லை, நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிதி கையாடல் உள்ளிட்ட பல்வேறு விஷ யங்களை சுட்டிக் காட்டினார் கள். இது தொடர்பாக புதிய ஊராட்சி தலைவர் எஸ்.கீதா சோலையப்பன் கூறுகை யில், வருகின்ற கிராமசபை கூட்டங்களில் வெளிப்படை யான நேர்மையான நிர்வா கத்தை வழங்குவோம். 100 நாள் வேலை திட்டத்தில் எந்த முறைகேடும் நடக்காமல் தீவிரமாக கண் காணிப்போம். ஏற்கனவே நடைபெற்ற வேலைக ளுக்கான சோசியல் ஆடிட் ரிப்போர்ட்டில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று ஆராய்ந்து வருகி றோம். அதில் தவறு நிரூ பிக்கப்பட்டால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவ டிக்கை மேற்கொள்ள ஊராட்சியின் சார்பில் பரிந்துரை செய்வோம் என்றார்.