அய்ஷே கோஷுக்கு பினராயி விஜயன் வாழ்த்து
புதுதில்லி, ஜன.11- ஜேஎன்யூ மாணவர்களின் போராட்டத்தின் வலிமை இந்த பெண்ணின் பார்வையில் உள் ளது என முதல்வர் பினராயி விஜயன் மாணவர் சங்கத் தலைவர் அய்ஷே கோஷை வாழ்த்தி யுள்ளார். புதுதில்லியில் சனியன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை அய்ஷே கோஷ் சந்தித் தார். அப்போது கேரள அரசின் தில்லி சிறப்பு அதிகாரி பி.சம்பத், இந்திய மாணவர் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் நிதீஷ் நாராய ணன், ஜேஎன்யூவில் நடந்த தாக்குதலில் படு காயம் அடைந்த நிகில் ஆகியோர் உடனிருந்த னர்.
இந்த சந்திப்பு குறித்து பினராயி விஜயன் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது: சங் பரிவருக்கு எதிரா நாட்டின் தலைநகரில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக காவிய போரில் ஜவஹர்லால் நேரு பல்க லைக்கழகம் வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட் டத்தில் ஈடுபட்டுள்ளது. சங்பரிவார் அமைப்பி னர் அந்த வளாகத்துக்குள் புகுந்து வெறி யாட்டம் நடத்தினர். வன்முறையால் ஜேஎன்யூ வின் போராட்டங்களை ஒழித்து விடலாம் என்பது சங்பரிவாரின் தவறான எண்ணம். சமரசமில்லாத தீரமான போராட்டக் காட்சி யை ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவரும் ஜேஎன்யூ தலைவருமான அய்ஷே கோஷ் இந்த வரலாற்று சிறப்ப மிக்க போராட்டத் துக்கு தலைமை வகித்தார். உடைந்த தலை யுடன் மீண்டும் போராட்டக்களத்துக்கு வரவே செய்தார் அய்ஷே சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் அய்ஷே கேரளா ஹவுஸுக்கு வந்தார். ரத்தசாட்சியான சப்தர் ஹஸ்மியைக் குறித்து சுதன்வா தேஷ் பாண்டே எழுதியுள்ள ‘ஹல்லா போல்’ புத்த கம் அய்ஷேக்கு வழங்கப்பட்டது. ஜேஎன்யூ மாணவர்களின் போராட்ட சக்தி இந்த இந்த பெண்ணின் கண்ணில் உள்ளது. நீதிக்கான போராட்டத்திற்கு வாழ்த்துகள் என தெரி விக்கப்பட்டுள்ளது.