tamilnadu

img

பொதுத்தேர்வு: பள்ளி மாணவர்களின் விவரங்கள் வெளியீடு

சென்னை, பிப்.18- பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் விவ ரங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2-ல் தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் முடிந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெறுகின்றன.  இந்நிலையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்கள் வெளி யாகியுள்ளன.  10ஆம் வகுப்பில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 569 பேரும், 11ஆம் வகுப்பில் 8 லட்சத்து 26ஆயிரத்து 82 மாணவர்களும், 12ஆம் வகுப்பில்  8 லட்சத்து 16ஆயிரத்து 358 பேரும் பொதுத்தேர்வு எழுத உள்ள னர்.