tamilnadu

img

திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் அனுமதி....

நெல்லை:
திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தூக்க மாத்திரையை அதிகமாக உட்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக எம்எல்ஏவாக பூங்கோதை ஆலடி அருணா தேர்வு செய்யப்பட்டார்.பின்னர், 2016 ஆம் ஆண்டு மீண்டும் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில், திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா உடல்நலக்குறைவு காரணமாக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.இவரது தந்தை ஆலடி அருணா மூன்று முறை ஆலங்குளம் தொகுதியில் திமுக எம்எல்ஏவாக தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

;