tamilnadu

img

கழிவுநீர் வடிவதால் துர்நாற்றம்

உதகை ஸ்லேடர் ஹவுஸ் பகுதியில் கழிவு நீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வடிவதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீர் செல்லும்  கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.