குறைதீர் கூட்டம்
நீலகிரி, டிச. 9- நீலகிரி கோட்ட அஞ்சலக அலுவலகத்தில் ஓய்வூ தியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறவுள் ளது. இது குறித்து நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப் பாளர் என்.கார்த்திகேயன் தெரிவித்துள்ளதாவது, ஓய்வூதி யதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் வருகின்ற டிச. 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு நீலகிரி கோட்ட அஞ்சலக அலு வலகத்தில் நடைபெற உள்ளது. இதில் குறைகள் இருப் போர் தெரிவிக்கலாம் என்றும் தபால் துறை ஓய்வூதிய தாரர்கள் கடிதம் மூலமாக நீலகிரி கோட்டம், உதகை மண்ட லம், 643 001 என்ற முகவரிக்கு டிச.19 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறும் தெரிவித்துள்ளார்.
வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ஈரோடு, டிச. 9- வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம்,அந்தியூர் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணைக்கு கும்பரவாணி பள்ளம், தோணிமடுவு, வரட்டுப்பள்ளம் தாளக்கரை மேற்குப்பகுதி உள்ளிட்ட பகுதியில் பெய்யும் மழை நீரே முக்கிய நீராதாரமாகும். இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அணை அதன் முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதைத்தொடர்ந்து தற்போது ஏரி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்படி பழைய ஆயக்கட்டு பகுதியான கெட்டி சமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி,சந்திபாளையம், வேம்பத்தி மற்றும் ஆப்பக்கூடல் ஆகிய ஏரிகளுக்கு டிசம்பர் 6 ஆம் தேதியிலிருந்து டிச.18ம் தேதி வரை தொடர்ந்து 12 நாட்களுக்கு தினமும் 64 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
மின் தடை
ஈரோடு, டிச. 9- பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் (டிச.11) புதனன்று நடைபெறவுள்ளது. இதனால், பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெருந்துறை வடக்கு மற்றும் நகர் பகுதிக்கு உட்பட்ட இடங்கள், சிப்காட் வளாகம் (சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர), ஓலப்பாளையம், திருவாச்சி, கந்தாம்பாளையம், வெள்ளியம்பாளையம், பெரிய மடத்துப்பாளையம், சின்னமடத்துப்பாளையம், மாயா அவெண்யூ, சேனிடோரியம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பெருந்துறை திங்களுர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி (டிச.12) வியாழனன்று நடைபெறவுள்ளது. இதனால் திங்களுர், கிரே நகர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டண்பாளையம், மேட்டூர், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், தாசம்புதூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், பொன்முடி, நடுவலசு, ஆயிக்கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரி பாளையம், பட்டகாரன் பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப் பாளையம், கோமையன் வலசு, வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.