திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

துருக்கிக்கு ஆயுதம் விநியோகம் செய்யமாட்டோம் - ஜெர்மனி அதிபர்

துருக்கிக்கு ஆயுதங்கள் அனுப்புவதை நிறுத்தப்போவதாக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெர்மனி அதிபர் கூறியதாவது, துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவில் குர்து போராளிகளால் எல்லையோரத்தில் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி துருக்கி படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்து சில தினங்களாகவே இதை நிறுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறேன். ஆனால் துருக்கி இதை தொடர்ந்து நடத்தி வருகின்றது. இதன் காரணமாக சிரியாவில் குழந்தைகள் உட்பட பல லட்சம் பேர் வெளியேறி வருகின்றனர். ஆகவே இந்தச் சூழ்நிலையில் துருக்கிக்கு, ஜெர்மனி ஆயுதங்களை விநியோகம் செய்யாது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

;