tamilnadu

img

கருக்கலைப்பு தடைச்சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது - தென்கொரியா நீதிமன்றம் தீர்ப்பு

தென்கொரியாவில் 4 ஆண்டு போராட்டங்களுக்கு பிறகு, 66 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் கருக்கலைப்பு தடைச்சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தென்கொரியாவில், கருக்கலைப்பு தடைச் சட்டம் கடந்த 1953-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இத்தடையை மீறி கருக்கலைப்பு செய்துகொள்ளும் பெண்களுக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனையும், கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது. அதே சமயம், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்ய தடை இல்லை.

கடந்த சில ஆண்டுகளாக, இந்த கருக்கலைப்பு சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில், திடீர் திருப்பமாக கருக்கலைப்பு தடைச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என அந்நாட்டு அரசியலமைப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், வரும் 2020-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தச் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த காலக்கெடுவுக்குள் திருத்தியமைக்கப்படவில்லை என்றால் அந்தச் சட்டம் செயலற்றதாகும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


;